search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 20 ரென்டர்
    X
    கேலக்ஸி நோட் 20 ரென்டர்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 360 டிகிரி ரென்டர்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 360 டிகிரி ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் 360 டிகிரி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் எஃப்சிசி வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய ஸ்மார்ட்போன்கள் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் பின்புறம் பல்வேறு கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இணையத்தில் லீக் ஆகி இருக்கும் 360 டிகிரி ரென்டர்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக செங்குத்தாக பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவை செவ்வக வடிவம் கொண்ட மாட்யூலில் பொருத்தப்படுகிறது. 

     கேலக்ஸி நோட் 20 ரென்டர்

    பேக் பேனலின் கீழ்புறத்தில் சாம்சங் லோகோ மற்றும் மேட் பிளாக் ஃபினிஷன் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால், இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. 

    முன்புறம் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கிறது. ரென்டர்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஃபிலாட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    ரென்டர்கள் தவிர கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் எஃப்சிசி வலைதளத்தில் எஸ்எம் என்981பி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. எஃப்சிசி விவரங்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இத்துடன் என்எஃப்சி வசதி, ப்ளூடூத் 5, வைபை, ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. மேலும் எஸ் பென் போனினுள் இருந்து கொண்டே வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 9 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×