search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி நோட் 9
    X
    ரெட்மி நோட் 9

    6 ஜிபி ரேமுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேமுடன் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
     

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வெளியீட்டு தேதி உள்பட ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் இணைகிறது. 

    ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்று இருந்தது. இத்துடன் 4 ஜிபி ரேம் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
     
     ரெட்மி நோட் 9

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மாடல் அறிமுகமாகும் என்றும் இத்துடன் 6 ஜிபி ரேம் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படவில்லை. 

    தற்போதைய தகவல்களின் படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், பின்புறம் நான்கு பிரைமரி கேமராக்கள், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×