என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
     

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 720x1520 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார்  வழங்கப்பட்டுள்ள நிலையில், புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கேலக்ஸி எம்01எஸ்

    சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் சிறப்பம்சங்கள்

    - 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் பிஎல்எஸ் டிஎஃப்டி எல்சிடி இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22
    - 650MHz IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யுஐ கோர் 1.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
    - 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் கிரே மற்றும் லைட் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
     

    விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.56 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க எக்ஸ்50 மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    விவோ எக்ஸ்50 ப்ரோ மாடலில் 48 எம்பி கேமரா, கிம்பல் கேமரா சிஸ்டம், 5 ஆக்சிஸ் OIS, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8 எம்பி 5எக்ஸ் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     விவோ எக்ஸ்50 சீரிஸ்

    விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.56 இன்ச் 2376×1080 பிக்சல் FHD+ 19.8:9 E3 AMOLED டிஸ்ப்ளே
    - எக்ஸ்50 — ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அட்ரினோ 618 GPU
    - எக்ஸ்50 ப்ரோ — ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU
    - 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
    - டூயல் சிம்
    - எக்ஸ்50 — 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6, OIS
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
    - 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.48
    - 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, f/2.48
    - எக்ஸ்50 ப்ரோ — 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 2.5cm மேக்ரோ
    - 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, f/3.4
    - 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.46
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.48
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
    - 5ஜி SA/ NSA (எக்ஸ்50 ப்ரோ மாடலில் மட்டும்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - எக்ஸ்50 — 4200எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - எக்ஸ்50 ப்ரோ — 4315எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் புளூ மற்றும் கிளேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 34990 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 37990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்ஃபா கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்குகிறது. 
    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
     
     
    கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் சமீபத்தில் பிஐஎஸ் சான்று பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்சமயம் வெளியீட்டுக்கு முன் கூகுள் நிறுவனமே புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை லீக் செய்து விட்டது. கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 4ஏ அதிகாரப்பூர்வ ரென்டர் வெளியானது. ரென்டர் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது. 

    இதனால் முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்று, புதிய மாடலில் பெரிய பெசல்கள் இருக்காது. இணையத்தில் லீக் ஆகி இருக்கும் ரென்டரில் கூகுள் பிக்சல் 4ஏ கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பச்சை நிற பவர் பட்டன், ஒற்றை செல்ஃபி கேமரா, பின்புறம் ஒற்றை கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.

    இதன் பேக் பேனல் பார்க்க பிக்சல் 4 போன்றே காட்சியளிக்கிறது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் மேல்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    பிக்சல் 4ஏ லீக்

    கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
    - 4 அல்லது 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்கள்  
    - 12 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 3080 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    தற்போதைய தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இது ஐபோன் எஸ்இ 2020 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 அப்டேட் வெளியிடப்படுகிறது.
     

    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 வெர்ஷன் ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ 2 எனும் பெயரில் வழங்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 வெர்ஷனை பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு கடந்த வாரம் வெளியிட்டது. புதிய இயங்குதளத்தில் ஸ்டேபிலிட்டி மற்றும் ஆப் கம்பேடிபிலிட்டி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 பீட்டா வழங்கும் முதன்மை நிறுவனமாக ஒன்பிளஸ் இருக்கிறது. 

    ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2

    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் டெவலப்பர்கள் மற்றும் மிக விரைவில் பயன்படுத்த நினைப்போருக்கானது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த இயங்குதளம் அன்றாட பயன்பாட்டுக்கான சாதனத்தின் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தெரிவித்து உள்ளது.

    ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ 2 இன்ஸ்டால் செய்ய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் குறைந்த பட்சம் 30 சதவீத பேட்டரி மற்றும் குறைந்த பட்சம் 3 ஜிபி மெமரி இருக்க வேண்டும்.
    ரியல்மி பிராண்டின் புதிய சி11 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நைட்ஸ்கேப் மோடும் வழங்கப்பட்டு இருக்கிறது

     ரியல்மி சி11

    ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
    - 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - IMG பவர்விஆர் GE8320 GPU
    - 2 ஜிபி LPDDR4x ரேம்
    - 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகமாகும் என  அறிவித்து உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரெட்மி பிராண்டு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது. 

    புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ரெட்மி நோட் 9

    ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 FHD+ டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM மாலி-G52 2EEMC2 GPU
    - 3 ஜிபி LPDD4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 4 ஜிபி LPDD4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
    - கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5020 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் விளம்பர வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த வீடியோவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய வெர்ஷன் தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் தோற்றம் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் எல்டிஇ வெர்ஷன் போன்றே இருக்கிறது.

    ட்விட்டரில் லீக் ஆகி இருக்கும் வீடியோவின் படி கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி தோற்றத்தில் எந்த மாற்றங்களையும் கொண்டிருக்காது என தெரிகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் புதிய சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி வெர்ஷன் மிஸ்டிக் பிரான்ஸ் எனும் புதிய நிறத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி

    மேலும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வெர்ஷனை விட 0.5mm தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் அளவுகளில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

    முன்னதாக கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் ஹங்கேரி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-F707B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் ஹங்கேரி வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது விரைவில் அறிமுகமாகும் என்பதை மட்டும் உணர்த்தியது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் என்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.

    தற்போதைய தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6739 சிப்செட், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என்றும் 5.3 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.

    கேலக்ஸி எம்01 கோப்புப்படம்

    இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4, ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளம் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என தெரிகிறது.

    என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால், இது கழற்றக்கூடிய பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 
    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது.

    புதிய எடிஷன் வடிவமைப்பில் லம்போர்கினி பாரம்பரிய அம்சங்கள் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. லம்போர்கினி எடிஷன் மற்றும் இதனுடன் வழங்கப்படும் அக்சஸரீக்கள் அழகிய பேக்கேஜில் வழங்கப்படுகின்றன. விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் பாக்ஸ் லம்போர்கினி கார் கதவுகளை திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கேஸ், சார்ஜர், யுஎஸ்பி கேபிள், இன்-வெஹிகில் ஃபிளாஷ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்டவை இந்த எடிஷனுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கின்றன. கலர்ஒஎஸ் 7.1 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கார் தீம்களுடன் கிடைக்கிறது.

     ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
    - 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
    - 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

    புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் இப்படி தான் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் இல்லாமல் வழங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஐபோன் பேக்கேஜிங் விவரங்களில் 2020 ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    அந்த வகையில் புதிய ஐபோன் சார்ஜர் மற்றும் இயர்பட்ஸ் இல்லாமலேயே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால், ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 சீரிஸ் பாக்ஸ் ரென்டர்

    இவைதவிர சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கிறது. 

    ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின் படி சார்ஜர் மற்றும் இயர்போன்களை நீக்குவதன் மூலம் விலையை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என தெரிகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

    சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதை உணர்த்தும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கிறது. 

    தற்சமயம் டீசர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பது தற்சமயம் தெரியவந்து உள்ளது. 

    டீசரை தொடர்ந்து ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    Redmi, Redmi Note 9, Smartphone, ரெட்மி, ரெட்மி நோட் 9, ஸ்மார்ட்போன்

    ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340x1080 FHD+ டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
    - ARM Mali-G52 2EEMC2 GPU
    - 3GB LPDD4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
    - 4GB LPDD4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 48MP பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS
    - 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2MP மேக்ரோ லென்ஸ்
    - 2MP டெப்த் சென்சார், f/2.4
    - 13MP செல்ஃபி கேமரா, f/2.25
    - கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5020mAh பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    லாவா நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செயய்ப்பட்டுள்ளது.
     

    லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்டி+ 18:9 டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் புகைப்படங்களை அழகாக்கும் அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, 3100mAh பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    லாவா இசட்61 ப்ரோ

    லாவா இசட்61 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி+2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு ஒஎஸ்
    - டூயல் சிம்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 3100 எம்ஏஹெச் பேட்டரி

    லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளூ மற்றும் ஆம்பர் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய லாவா இசட்61 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 5774 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×