search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன்
    X
    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது.

    புதிய எடிஷன் வடிவமைப்பில் லம்போர்கினி பாரம்பரிய அம்சங்கள் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. லம்போர்கினி எடிஷன் மற்றும் இதனுடன் வழங்கப்படும் அக்சஸரீக்கள் அழகிய பேக்கேஜில் வழங்கப்படுகின்றன. விசேஷமாக உருவாக்கப்பட்டு இருக்கும் பாக்ஸ் லம்போர்கினி கார் கதவுகளை திறப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் கேஸ், சார்ஜர், யுஎஸ்பி கேபிள், இன்-வெஹிகில் ஃபிளாஷ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்டவை இந்த எடிஷனுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கின்றன. கலர்ஒஎஸ் 7.1 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கார் தீம்களுடன் கிடைக்கிறது.

     ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
    - 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
    - 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

    புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ லம்போர்கினி எடிஷன் தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. 
    Next Story
    ×