என் மலர்
மொபைல்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி உலகின் முதல் ஏஆர் அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போனினை விஆர் முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது.
ஏஆர் நிகழ்வு என்பதால், பயனர்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வை பார்க்க முடியும். ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 15 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்பதிவு செய்பவர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் மற்றொரு சிறப்பு பரிசாக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் வி1 மற்றும் போன் கவர் வழங்கப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு ஏஆர் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நார்டு அறிமுக நிகழ்வினை பயனர்கள் ஒன்பிளஸ் நார்டு ஏஆர் செயலியில் பார்க்க முடியும். அறிமுக நிகழ்வு ஜூலை 21, மாலை 7.30 மணிக்கு துவங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அமேசான் தளம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் லீக் ஆன டீசர் வலைதள பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் ஏஆர் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் விலை 500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், அமேசான் மூலம் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியகி உள்ளது. முந்தைய தகவல்களிலும் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 இல் அறிமுகமாகும் என்றே கூறப்பட்டது.
முந்தைய வழக்கப்படி சாம்சங் இதே ஆண்டும் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை ஆகஸ்ட் 5 இல் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 20, நோட் 20 பிளஸ், நோட் 29 அல்ட்ரா உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
மேலும் இவற்றுடன் கேலக்ஸி ஃபோல்டு 2, புதிய கேலக்ஸி வாட்ச் மற்றும் கேலக்ஸி டேப்லெட் போன்ற சாதனங்களும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 2020 கேலக்ஸி அன்பேக்டு விழா ஆன்லைனில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படுகிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள், வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மொபைலின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் புதிய டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் முறையாக ஸ்மார்ட்போன் புகைப்படம் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்து இருக்கிறது. கேமரா சென்சார்களை அடுத்து ஃபிளாஷ் மாட்யூல் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இதே தகவலை நிரூபிக்கும் ரென்டர்கள் இணையத்தில் வெிளியாகி இருந்தன.

முன்னதாக வெளியான தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருக்கிறது.
இதுதவிர புகைப்படங்களை எடுக்க 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் 48எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் வளைந்த எட்ஜ்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 19.5:9 எல்சிடி ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி 118° வைடு ஆங்கில் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் டீப் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18645 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி 8 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 9799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7999 விலையில் வெளியிடப்பட்டது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 8999 விலையில் வெளியிடப்பட்டது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 இல் இருந்து ரூ. 9799 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வுக்கு ரெட்மி எவ்வித காரணமும் வழங்கவில்லை.

ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் ஔரா மிரர் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டிருக்கிறது. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக போக்கோ வெளியிட்ட ஸ்மார்ட்போன் புகைப்படத்தின் படி, இதில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
ப்ளிப்கார்ட் டீசர்களின்படி போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ரகசியமாக உள்ளன.

எனினும், புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போக்கோ ஸ்மார்ட்போன் M2001J21 எனும் மாடல் நம்பருடன் சியோமி இந்தியா வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
இந்த ஸ்மார்ட்போனிற்கான கெர்னல் சோர்ஸ் கோட் விவரங்களில் புதிய ஸ்மார்ட்போன் கிராம் எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே சோர்ஸ் கோட் ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலுடன் ஒற்று போகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 3ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களான பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் மாடல்கள் விற்பனை நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இரு ஸ்மார்ட்போன்களும் இனி கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படாது. அந்த வகையில் இரு பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கும்.
கூகுள் ஸ்டோர் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களின் விற்பனையை முடித்துவிட்டது. இன்னமும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன் மாடலை வாங்க விரும்புவோர் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். என கூகுள் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.
பிக்சல் 3ஏ சீரிஸ் மூலம் கூகுள் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்ய துவங்கியது. பிக்சல் 3ஏ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட பிக்சல் 4ஏ சீரிஸ் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்திற்குள் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ. 21999 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஏ31 தற்சமயம் ரூ. 1000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ரூ. 20999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய விலை அமேசான், சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது. கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
- ARM மாலி-G52 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ பிராண்டு தனது புதிய எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் பார்க்க ரெட்மி நோட் 9 ப்ரோ சர்வதேச மாடல் போன்று தெரிகிறது. போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் M2003J6CI எனும் மாடல் நம்பருடன் சியோமி வலைதளத்தில் வெளியாகி இருந்தது.

புதிய ஸ்மார்ட்போனில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் அதிக ரிஃப்ரெஷ் ரேட் எல்சிடி ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என போக்கோ பிராண்டு தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய விலை குறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் ஒன்பிளஸ் நார்டு என அழைக்கப்பட இருக்கிறது. இதனை ஒன்பிளஸ் புதிய வீடியோவில் தெரியப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் வெளியிட்ட வீடியோ ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளின் போது எடுக்கப்பட்டதாகும்.
நான்கு பாகங்களாக வெளியாக இருக்கும் வீடியோ சீரிஸ் இரண்டாவது வீடியோ ஜூலை 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போதைய வீடியோவின் ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன் ஒன்று டூயல் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 32 எம்பி மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

மேலும் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஐரோப்பா மற்றும் இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் நார்டு இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவில் விற்பனை துவங்கிய ஒரே மாதத்திற்குள் இத்தனை லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய நார்சோ சீரிஸ் ரெட்மி பிராண்டின் பட்ஜெட் ரக மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றன. ரியல்மி நார்சோ சீரிஸ் முதல் விற்பனை மே 18 ஆம் தேதி நடைபெற்றது.

முதல் விற்பனையின் போது ரியல்மி நார்சோ சீரிஸ் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி பிராண்டு அறிவித்து இருந்தது. இந்தியாவில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் கேமிங் போன்களாக இவை அறிமுகம் செய்யப்பட்டன.
ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10 மாடலில் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.






