search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி நார்சோ
    X
    ரியல்மி நார்சோ

    இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரியல்மி நார்சோ சீரிஸ்

    ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


    ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்டன. 

    இந்நிலையில், இந்தியாவில் விற்பனை துவங்கிய ஒரே மாதத்திற்குள் இத்தனை லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய நார்சோ சீரிஸ் ரெட்மி பிராண்டின் பட்ஜெட் ரக மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றன. ரியல்மி நார்சோ சீரிஸ் முதல் விற்பனை மே 18 ஆம் தேதி நடைபெற்றது.
     ரியல்மி நார்சோ 10
    முதல் விற்பனையின் போது ரியல்மி நார்சோ சீரிஸ் 70 ஆயிரம் யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி பிராண்டு அறிவித்து இருந்தது. இந்தியாவில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் கேமிங் போன்களாக இவை அறிமுகம் செய்யப்பட்டன.

    ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10 மாடலில் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

    நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×