என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மி பிராண்டின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த வரிசையில், மீண்டும் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ரியல்மி 5ஐ 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் விலை ரூ. 9,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 10,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 10,999 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் விலை இரண்டாவது முறையாக ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரியல்மி 6
    இதேபோன்று ரியல்மி 6 4ஜிபி+64ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14999 ஆகவும், 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் ரூ. 15,999 இல் இருந்து ரூ. 16,999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரியல்மி 6 8ஜிபி+128ஜிபி மாடல் ரூ. 16,999 இல் இருந்து ரூ. 17,999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

    இது மூன்று வேரியண்ட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.1000 அதிகம் ஆகும். மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி பிராண்டின் நார்சோ 10 ஸ்மார்ட்போன் புதிதாக தட் புளூ எனும் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிற வேரியண்ட் ஜூன் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி நார்சோ 10 மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3,  வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ரியல்மி நார்சோ 10
    புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2 நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்ட விதத்தை விவரிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு அல்லது ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் வெளியீடு சந்தையில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. 

    அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் உருவான விதத்தை எடுத்துரைக்கும் வீடியோ டிரெயிலர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ தொடர் மொத்தம் நான்கு பாகங்களை கொண்டது என கூறப்படுகிறது. இந்த தொடரின் முதல் வீடியோ ஜூன் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 
     ஒன்பிளஸ்
    தற்சமயம் வெளியிடப்பட்டு இருப்பது முதல் வீடியோவுக்கான டீசர் என தெரிகிறது. டீசர் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வீடியோவில் புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ஆறு மாதங்களாக நடைபெற்றது என தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அமேசான் தளத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஒன்பிளஸ் இசட் அல்லது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனிற்கான நோட்டிஃபை மி வலைபக்கம் அமேசானில் துவங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய வலைப்பக்கத்தன் கீழ் நோட்டிஃபை மி பட்டன் இடம்பெற்றுள்ளது. பயனர்கள் இந்த பட்டனை க்ளிக் செய்தால் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதோடு, பிரத்யேக கேஷ்பேக் பரிசுகளை வென்றிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒன்பிளஸ் டீசர்
    புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களை ஒன்பிளஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

    அமேசான் வலைபக்கத்திலும் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. புதிய ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் என்பதை மட்டுமே ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

    முந்தைய டீசர்களின்படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் லைட் புளூ நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பிரீமியம், ஃபிளாக்ஷிப் அனுபவத்தை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.
    ரியல்மி பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டது. 

    இந்நிலையில், இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போனுடன் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ரியல்மி நார்சோ 10ஏ 3ஜிபி+32ஜிபி மெமரி வேரியண்ட் விலை முந்தைய ரூ. 8499 இல் இருந்து தற்சமயம் ரூ. 8999 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக ரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி+64ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 9999 விலையில் வெளியிடப்பட்டது.
    ரியல்மி நார்சோ 10ஏ
    ரியல்மி சி3 3ஜிபி +32ஜிபி வேரியண்ட் ரூ. 7999 இல் இருந்து ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ. 8999 என மாற்றப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் தற்சமயம் ரூ. 9999 என உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்திய சந்தையில் ரியல்மி சி3 அறிமுகமானதில் இருந்து இதன் விலை தற்சமயம் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் மாற்றப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒப்போ எஃப்15 மற்றும் ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையில் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்படுகிறது.

    தற்சமயம் ஒப்போ எஃப்15 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை தற்சமயம் ரூ. 18990 முதல் துவங்குகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 21990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 21990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின் படி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
    ஒப்போ எஃப்15
    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்படுகிறது.

    ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மோனோகுரோம் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 16 எம்பி பாப் அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு11 பீட்டா 1 சீனாவில் வெளியிடப்படுகிறது.


    சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 வெளியிடுவதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த அப்டேட் சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் இந்த அப்டேட் வெளியிடப்பட்டது.

    ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்றே இரு ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இவற்றில் சியோமியின் MIUI இன்டர்ஃபேஸ் வழங்கப்படவில்லை. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் (AOSP) சார்ந்து இயங்குகிறது.
    ரெட்மி கே30 ப்ரோ
    புதிய அப்டேட் பற்றிய விவரங்களை சியோமி தனது வெய்போ அக்கவுண்ட்டில் அறிவித்தது. ஆண்ட்ராய்டு 11 பீட்டா உண்மையில் டெவலப்பர்களுக்கானது ஆகும். இதை கொண்டு டெவலப்பர்கள் தங்களது செயலி புதிய ஆண்ட்ராய்டு இயங்குததளத்தில் சீராக இயங்க வைக்க முடியும் என சியோமி தெரிவித்துள்ளது. 

    மேலும் புதிய அப்டேட் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் தரவுகளை பேக்கப் செய்து கொள்ளவும் சியோமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு 11 பீட்டா 1 பதிப்பை இன்ஸ்டால் செய்ய பயனர்கள் எம்ஐ கம்யூனிட்டி வலைதளத்தில் இருந்து .tgz எனும் எக்ஸ்டென்ஷன் ஃபைலினை டவுன்லோடு செய்ய வேண்டும். 
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ11கே ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 2ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர்ஒஎஸ் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

    ஒப்போ ஏ11கே

    ஒப்போ ஏ11கே சிறப்பம்சங்கள்:

    6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச்
    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    IMG PowerVR GE8320 GPU
    2 ஜிபி ரேம்
    32 ஜிபி மெமரி
    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் 6.1
    13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    2 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
    5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    டூயல் சிம்
    கைரேகை சென்சார்
    3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    4230 எம்ஏஹெச் பேட்டரி

    ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன் ஃபுளோவிங் சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறியப்படாத நிலையில், ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் புதிய ஸ்மார்ட்போன் விலை விவரங்களை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். கால் பெய் தனது ட்விட்டரில், 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போனின் ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்திருக்கிறார்.

    இதனால் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22779 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 இல் வெளியான ஒன்பிளஸ் ஒன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டது. 

    கால் பெய் ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    தற்சமயம் புதிய ஒன்பிளஸ் இசட் வெளியீட்டு தேதி மற்றும் விலை அறிவிக்கப்படாத நிலையில், இதன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

    எனினும், இது ஒன்பிளஸ் ஒன் போன்றே புதிய ஒன்பிளஸ் இசட் துவக்க விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதுதவிர 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    நோக்கியா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை நோக்கியா பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    என்ட்ரி லெவல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்புடன் புதிய சிப்செட் வெளியிட்டதற்கு குவால்காம் நிறுவனத்திற்கு பாராட்டி தெரிவித்து உள்ளது.

    ‘தலைசிறந்த 5ஜி அனுபவத்தை குறைந்த விலையில் வழங்க புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்வதில் ஆவல் கொண்டிருக்கிறோம்’ என ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் ஜூகோ சர்விகாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்டிருக்கும் என ஜூஹோ தெரிவித்தார். 

    குவால்காம்

    புதிய நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் நோக்கியா 8.3 மாடலை விட விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நோக்கியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விற்பனை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை துவங்கப்படவில்லை.

    நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 6.3 அல்லது நோக்கியா 7.3 பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இது விலை குறைந்த 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இது பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

    புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    மைக்ரோமேக்ஸ்

    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இவை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    'நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம், விரைவில் மிகப்பெரிய சாதனத்தை வெளியிடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள்' என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.



    ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் ரூ. 14999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்தது. பின் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இதன் விலையை ரூ. 1500 உயர்த்துவதாக ரெட்மி அறிவித்தது.

    அந்த வகையில் முந்தைய விலை உயர்வின்படி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 16499 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.

    இம்முறை இதன் 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல்களின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் விலை முறையே ரூ. 16999 மற்றும் ரூ. 18499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19999 விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

    இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் அடுத்த விற்பனை ஜூன் 24 ஆம் தேதி துவங்குகிறது.

    முன்னதாக ரெட்மி நோட் 8, ரெட்மி 8ஏ டூயல் மற்றும் ரெட்மி 8 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டது. சமீபத்திய விலை உயர்வுக்கான காரணம் தொடர்பாக சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    ×