என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 

    புதிய ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களில் 6.7 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், 120 ஹெர்ச்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 3செமீ மேக்ரோ மோட், 13 எம்பி டெலிபோட்டோ கேமரா, 5x ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வசதி கொண்டுள்ளது.

    ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 3 செமீ மேக்ரோ, 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 10x ஹைப்ரிட் ஜூம், 60x டிஜிட்டல் ஜூம் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.  

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - ஃபைண்ட் எக்ஸ்2: 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.0) மெமரி
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
    - டூயல் சிம்
    - ஃபைண்ட் எக்ஸ்2: 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
    - 13 எம்பி டெலிபோட்டோ கேமரா,  f/2.4
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
    - 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
    - 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - ஃபைண்ட் எக்ஸ்2: IP54 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - யுஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப்-சி
    - ஃபைண்ட் எக்ஸ்2: 4200 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ: 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஓசன் கிளாஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

    ஹாலோகிராஃபிக் 3D கிளாஸ்டிக் டிசைன் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஏ21எஸ்

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் 850 பிராசஸர்
    - மாலி-G52
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/ 2.4
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5,000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை பிக்சல் 4ஏ விற்பனை அக்டோபர் 22 ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

    புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மே மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டது. பின் ஜூன் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் வெளியீடு மீண்டும் தாமதமாகி இருப்பதாக தெரிகிறது.

    பிக்சல் 4ஏ

    கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - டைட்டன் M செக்யூரிட்டி சிப்
    - 6 ஜிபி LPDDR4X ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10
    - 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
    - 3080 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5310 மொபைல் போனினை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மேம்பட்ட புதிய நோக்கியா 5310 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மொபைல் போனில் எம்பி3 பிளேயர், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் 1200 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா 5310

    நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - MT6260A பிராசஸர்
    - 8 எம்பி ரேம்
    - 16 எம்பி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
    - விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
    - 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி
    - 1200எம்ஏஹெச் பேட்டரி

    நோக்கியா 5310 மொபைல் போன் வைட் / ரெட் மற்றும் பிளாக் / ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் துவங்கிவிட்டது. இதன் விற்பனை ஜூன் 23 ஆம் தேதி துவங்குகிறது.
    ரெட்மி பிராண்டின் ரெட்மி 9 பட்ஜெட் ஸ்மார்ட்போன் புதிய வேரியயண்ட் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி, 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டது. தற்சமயம் ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாக இருப்பது சீன வலைதளத்தில் வெயலியாகி இருக்கிறது.

    சீன வலைதள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் M2004J19G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் அம்சங்கள் முழுக்க சீன சந்தைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.  

    ரெட்மி 9

    புதிய ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கிரீன், பின்க், ரெட் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் சரவ்தேச சந்தை வேரியண்ட்டில் உள்ளது போன்றே வழங்கப்பட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன், ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் நாட்ச் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 5020 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
    டெக்னோ பிராண்டின் புதிய டெக்னோ ஸ்பார்ட் பவர் 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     


    டெக்னோ மொபைல் நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    டீசர் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி, நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ ஸ்பார்ட் பவர் 2

    இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்குகிறது. மேலும் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என டெக்னோ தெரிவித்துள்ளது.

    இதுதவிர புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும். 
    மோட்டோரோலா நறுவனத்தின் புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகிறது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. 

    முன்னதாக மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் டீசர்

    மோட்டோரோலா ஒன் பியூஷன் சிறப்பம்சங்கள்:

    6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே
    ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
    6 ஜிபி ரேம்
    128 ஜிபி மெமரி
    மெமரியை நீட்டிக்கும் வசதி
    கைரேகை சென்சார்
    64 எம்பி பிரைமரி கேமரா
    8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    5 எம்பி மேக்ரோ
    2 எம்பி டெப்த் கேமரா
    16 எம்பி செல்ஃபி கேமரா
    ஆண்ட்ராய்டு 10
    5000 எம்ஏஹெச் பேட்டரி
    15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 15 ஆம் கேகி மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக குறுகிய எண்ணிக்கையை விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விரைவில் கணிசமான அளவு ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்களை சீரான எண்ணிக்கையில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. அதுவரை திங்கள் கிழமை மற்றும் வியாழன் கிழமைகளில் குறுகிய எண்ணிக்கையில் விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. 

    இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கிவிட்டது. இதனால் ஒன்பிளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் விரைவில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

    ஒன்பிளஸ் 8 சீரிஸ்

    ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை விவரம்:

    ஒன்பிளஸ் 8 கிளேசியல் கிரீன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999

    ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999

    ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999

    ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 54,999

    ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளூ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59,999
    நீண்ட பேட்டரி பேக்கப், டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 5310 மொபைல் போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5310 பீச்சர் போன் மாடலின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5310 பீச்சர் போனில் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் முன்புற ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் நோக்கியா 5310 ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா

    நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே2ஜி
    - எம்டி6260ஏ பிராசஸர்
    - 8 எம்பி ரேம், 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - சிங்கிள் / டூயல் சிம்
    - சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
    - விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
    - 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி

    நோக்கியா 5310 வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 44 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விர்ச்சுவல் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
     
    முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலுக்கு மாற்றாக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்களும் இணையத்தில் வெளியாகின.

    தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேலக்ஸி அன்பேக்டு விழா ஆன்லைனில் நடைபெறுகிறது. ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் தங்களின் அறிமுக நிகழ்வுகளை ஆன்லைனில் நடத்த துவங்கி விட்டன. கடந்த ஆண்டு சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது.

    கேலக்ஸி நோட் 20 ரென்டர்

    அந்த வகையில் இந்த ஆண்டும் சாம்சங் அதே தேதியில் புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வில் நோட் மாடல் தவிர கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    முந்தைய ரென்டர்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் என கூறப்பட்டது. இத்துடன் மிக மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகின்றன. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

    இதுதவிர கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி, கேலக்ஸி டேப் எஸ்7 / எஸ்7 பிளஸ் மற்றும் கேலக்ஸி வாட்ச் 2 போன்ற மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ4 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.



    ஒப்போ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற விழாவில் ரெனோ4 மற்றும் ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ரெனோ4 மாடலில் 6.4 இன்ச் FHD+ ஸ்கிரீன், ரெனோ4 ப்ரோ மாடலில் 6.5 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 48 எம்பி பிரைமரி கேமரா, லேசர் ஆட்டோஃபோக்கஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 4 ப்ரோ மாடலில் மட்டும் OIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ ரெனோ 4 மாடலில் 119 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ சென்சாரும், ஒப்போ ரெனோ4 ப்ரோ மாடலில் 13 எம்பி டெலிபோட்டோ கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ4 5ஜி

    ஒப்போ ரெனோ4 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4020 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ரெனோ4 ப்ரோ 5ஜி

    ஒப்போ ரெனோ4 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்


    - 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED வளைந்த டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - 12 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
    - டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
    - 12 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
    - 13 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ரெனோ4 ஸ்மார்ட்போன் டைமண்ட் புளூ, மிரர் பிளாக் மற்றும் டரோ பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 2999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 31,960 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 3299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 35,145 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போன் டைமண்ட் புளூ, டைமண்ட் ரெட், மிரர் பிளாக், டைட்டானியம் பிளாக் மற்றும் கிரீன் கிளிட்டர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் 3799 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 40,470, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் 4299 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 45,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்சமயம் SM-N986U எனும் மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் தளத்தில் வெளியாகியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலுக்கு மாற்றாக நோட் 20 அல்ட்ரா வெளியாகும் என தெரிகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி N986U எனும் பெயரில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா பம்ப், 108 எம்பி பிரைமரி கேமரா, 6.9 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    கேலக்ஸி நோட் 20 லீக்

    முந்தைய ரென்டர்களின் படி கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, சிறிய பன்ச் ஹோல் ஸ்மார்ட்போனின் மத்தியில் பொருத்தப்படும் என கூறப்பட்டது. இத்துடன் மிக மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகின்றன. வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் மற்றும் எஸ் பென் வைப்பதற்கான ஸ்லாட் வழங்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

    வெளியீட்டை பொருத்தவரை கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் அறிமுகமாகும் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
    ×