என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஏ31

    சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
    - ARM மாலி-G52 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம், சம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
    போக்கோ பிராண்டின் புதிய சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    போக்கோ பிராண்டின் புதிய சாதனத்தின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் வீடியோவில், ‘அடுத்த போக்கோ சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்காக தலைசிறந்த பொருட்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் துவங்கினோம். இந்த கனவை எட்ட எங்களது நலம்விரும்பிகள் உதவியோடு தொடர்ந்து சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என போக்கோ பிராண்டு பொது மேலாளர் மன்மோகன் தெரிவித்தார்.



    கடந்த மாதம் போக்கோ எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் சியோமி இந்தியா வலைதளத்தில் லீக் ஆனது. இது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த மாடல் ஆகும். ஏற்கனவே போக்கோ எஃப்2 முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றும் ரெட்மி கே30 ப்ரோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என போக்கோ பிராண்டு அறிவித்தது.

    தற்போதைய டீசரின் படி புதிய சாதனம் போக்கோ எம்2 ப்ரோ மாடலா அல்லது போக்கோ எஃப்2 மாடலா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    கடந்த மாதம் போக்கோ பிராண்டு போக்கோ பாப் பட்ஸ் எனும் பெயரில் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை வெளியிட இருப்பதாக அறிவித்தது. போக்கோ இந்தியா பொது மேலாளர் சமீபத்தில் போக்கோ பிராண்டு மற்றொரு புதிய ஆடியோ சாதனத்தை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.
    விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்50 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.



    விவோ நிறுவனத்தின் எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவற்றின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை விவோ இந்தியா தலைமை செயல் அதிகாரி ஜெரோம் சென் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    விவோ எக்ஸ்50 சீரிஸ்

    விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.



    சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 என அழைக்கப்படும் இரு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் HD+ இன்ஃபினிட்டி ஒ LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் HD+ இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.  

    சாம்சங் கேலக்ஸி எம்11

    சாம்சங் கேலக்ஸி எம்11 சிறப்பம்சங்கள்

    - 6.4 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD TFT இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி 115° அல்ட்ராவைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்01

    சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்

    - 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
    - டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் வைலட் நிறங்களில் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.



    இந்தியாவில் மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தின.

    அந்த வரிசையில் போக்கோ பிராண்டும் தனது எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியது. இந்நிலையில், போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை மீண்டும் ரூ. 500 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.

    போக்கோ எக்ஸ்2 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,499 என மாற்றப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இது ரூ. 20,999 எனும் முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்திலும் மாற்றப்பட்டு விட்டது.

    போக்கோ எக்ஸ்2

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்சிடி ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி சோனி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 3டி வளைந்த ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பாடி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 27 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் தனது மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை மீண்டும் மாற்றி இருக்கிறது.



    சியோமியின் ரெட்மி பிராண்டு மூன்று ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றியிருக்கிறது. முன்னதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. இவற்றில் சியோமியின் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்த்தப்பட்டன.

    அந்த வகையில் ரெட்மி நோட் 8, ரெட்மி 8ஏ டுயல் மற்றும் ரெட்மி 8 ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெட்மி 8

    ரெட்மி ஸ்மார்ட்போன்களின் புதிய விலை விவரம்

    ரெட்மி நோட் 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,499 இல் இருந்து ரூ. 11,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 8 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,999 இல் இருந்து ரூ. 14,499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெட்மி 8 4ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9299 இல் இருந்து தற்சமயம் ரூ. 9499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெட்மி 8ஏ டூயல் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7299 இல் இருந்து தற்சமயம் ரூ. 7499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெட்மி ஸ்மார்ட்போன்களின் மாற்றப்பட்ட புதிய விலை சியோமி அதிகாரப்பூர்வ வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டது. விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இவை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பன்ச் ஹோல் கொண்ட விலை குறைந்த மாடல்கள் ஆகும்.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 9

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சிறப்பம்சங்கள்:

    - 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - IMG பவர் விஆர் GE8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்பி லோ-லைட் சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
    - 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
    - மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - IMG பவர் விஆர் GE8320 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 48 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்பி லோ-லைட் சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
    - 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என்றும் ஹாட் 9 ப்ரோ மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகமானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    சமீபத்திய காலாண்டு முடிவு வெளியீட்டின் போது, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து பிரீமியம் பிரிவில் வெளியிட இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு

    தற்போதைய தகவல்களின்படி புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திலேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே மிகமெல்லிய கண்ணாடி பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான காப்புரிமை விவரங்களில் புதிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலின் முன்புறம் நீண்ட டிஸ்ப்ளே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்க பொருத்தப்படுவதாக கூறப்பட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இவை ஜூன் மாத வாக்கிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
     


    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை அந்நிறுவனம் தெரியப்படுத்தி இருக்கிறது. இதற்கென மோட்டோரோலா சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஃபாஸ்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கென மோட்டோரோலா விளம்பர வீடியோ ஒன்றை யூடியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போன் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் இது அதிவேகமாக இயங்குவதோடு, இதன் கேமரா தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என வெளியான தெரியவந்துள்ளது.

    மோட்டோ ஜி ஃபாஸ்ட்

    இதுதவிர புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வீடியோவின் படி புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    மோட்டோரோலா மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. தற்போதைய விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஸ்மித் எனும் குறியீட்டு பெயரில், எக்ஸ்டி2071-4 எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டி வழங்க புதிய ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    மோட்டோரோலா ரேசர்

    தற்போதைய மோட்டோரோலா ரேசர் சீரிஸ் போன்களின் கேமரா சிறப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய தலைமுறை ரேசர் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்தின் 48 எம்பி பிரைமரி கேமராவும் முன்புறம் 20 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 10  இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு, வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    சியோமியின் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. இந்நிலையில், புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 என்ற பெயரில் அறிமுகமாகும் என்றும் இது ஜூன் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.  

    ப்ளூடூத் தள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மே 26 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.0 வழங்கப்படுகிறது. சற்றே வித்தியாசமான மாடல் நம்பர்களுடன் மொத்தம் ஐந்து ரெட்மி 9 மாடல்கள் உருவாகி வருகின்றன.

    ரெட்மி 8

    இவை M2004j19G மாடல் நம்பர் கொண்ட மாடல் அமெரிக்காவின் எஃப்சிசி க்ளியரன்ஸ் தளத்தில் லீக் ஆகியிருந்தது. இதுதவிர M2004J19I, M2004J19C, M2004J19PI, மற்றும் M2004J19AG மாடல் நம்பர்களில் ரெட்மி 9 வெர்ஷன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 4000 முதல் 5000 எம்ஏஹெச் பேட்டரி, இரு பிரைமரி கேமரா சென்சார்கள், ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படுகறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    தற்போதைய விவரங்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் 64 எம்பி குவாட் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எம்51 மற்றும் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உற்பத்தியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எம்31

    புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், குவாட் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனிலும் கேலக்ஸி எம்51 போன்றே 64 எம்பி பிரைமரி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் 128ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சாம்சங் கேலக்ஸி எம்51 மற்றும் எம்31எஸ் மாடல்கள் முறையே SM-M515F மற்றும் SM-M317F மாடல் நம்பர்களில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
    ×