search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ எக்ஸ்2
    X
    போக்கோ எக்ஸ்2

    இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு

    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.



    இந்தியாவில் மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தின.

    அந்த வரிசையில் போக்கோ பிராண்டும் தனது எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலையை உயர்த்தியது. இந்நிலையில், போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இதன் விலை ரூ. 500 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை மீண்டும் ரூ. 500 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.

    போக்கோ எக்ஸ்2 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 18,499 என மாற்றப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இது ரூ. 20,999 எனும் முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்திலும் மாற்றப்பட்டு விட்டது.

    போக்கோ எக்ஸ்2

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்சிடி ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி சோனி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 3டி வளைந்த ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பாடி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 27 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×