search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 5310
    X
    நோக்கியா 5310

    பட்ஜெட் விலையில் நோக்கியா 5310 இந்தியாவில் அறிமுகம்

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5310 மொபைல் போனினை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மேம்பட்ட புதிய நோக்கியா 5310 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மொபைல் போனில் எம்பி3 பிளேயர், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் 1200 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    நோக்கியா 5310

    நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - MT6260A பிராசஸர்
    - 8 எம்பி ரேம்
    - 16 எம்பி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
    - விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
    - 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி
    - 1200எம்ஏஹெச் பேட்டரி

    நோக்கியா 5310 மொபைல் போன் வைட் / ரெட் மற்றும் பிளாக் / ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் துவங்கிவிட்டது. இதன் விற்பனை ஜூன் 23 ஆம் தேதி துவங்குகிறது.
    Next Story
    ×