search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் டீசர்
    X
    ஒன்பிளஸ் டீசர்

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வீடியோ வெளியீடு

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்ட விதத்தை விவரிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு அல்லது ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் வெளியீடு சந்தையில் தற்சமயம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றி பல்வேறு விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. 

    அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் உருவான விதத்தை எடுத்துரைக்கும் வீடியோ டிரெயிலர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ தொடர் மொத்தம் நான்கு பாகங்களை கொண்டது என கூறப்படுகிறது. இந்த தொடரின் முதல் வீடியோ ஜூன் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 
     ஒன்பிளஸ்
    தற்சமயம் வெளியிடப்பட்டு இருப்பது முதல் வீடியோவுக்கான டீசர் என தெரிகிறது. டீசர் வெளியீட்டை தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வீடியோவில் புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ஆறு மாதங்களாக நடைபெற்றது என தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதுதவிர 64 எம்பி+16 எம்பி+2 எம்பி கேமரா சென்சார்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×