search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ்
    X
    ஒன்பிளஸ்

    ஒன்பிளஸ் இசட் விலை விவரங்கள் வெளியீடு

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறியப்படாத நிலையில், ஒன்பிளஸ் இணை நிறுவனர் கால் பெய் புதிய ஸ்மார்ட்போன் விலை விவரங்களை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். கால் பெய் தனது ட்விட்டரில், 2014 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட்போனின் ட்விட்டர் பதிவை ரீட்விட் செய்திருக்கிறார்.

    இதனால் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22779 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 இல் வெளியான ஒன்பிளஸ் ஒன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டது. 

    கால் பெய் ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    தற்சமயம் புதிய ஒன்பிளஸ் இசட் வெளியீட்டு தேதி மற்றும் விலை அறிவிக்கப்படாத நிலையில், இதன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

    எனினும், இது ஒன்பிளஸ் ஒன் போன்றே புதிய ஒன்பிளஸ் இசட் துவக்க விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

    இதுதவிர 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×