search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் நார்டு
    X
    ஒன்பிளஸ் நார்டு

    ஒன்பிளஸ் நார்டு வெளியீட்டு தேதி அறிவிப்பு

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி உலகின் முதல் ஏஆர் அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் 2 ஸ்மார்ட்போனினை விஆர் முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. 

    ஏஆர் நிகழ்வு என்பதால், பயனர்கள் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வை பார்க்க முடியும். ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 15 ஆம் தேதி துவங்குகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு

    முன்பதிவு செய்பவர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் மற்றொரு சிறப்பு பரிசாக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் வி1 மற்றும் போன் கவர் வழங்கப்பட இருக்கிறது. 

    ஒன்பிளஸ் நார்டு ஏஆர் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் நார்டு அறிமுக நிகழ்வினை பயனர்கள் ஒன்பிளஸ் நார்டு ஏஆர் செயலியில் பார்க்க முடியும். அறிமுக நிகழ்வு ஜூலை 21, மாலை 7.30 மணிக்கு துவங்குகிறது.
    Next Story
    ×