search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் 8 சீரிஸ்
    X
    ஒன்பிளஸ் 8 சீரிஸ்

    ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 அப்டேட் வெளியீடு

    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 அப்டேட் வெளியிடப்படுகிறது.
     

    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 வெர்ஷன் ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ 2 எனும் பெயரில் வழங்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2 வெர்ஷனை பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு கடந்த வாரம் வெளியிட்டது. புதிய இயங்குதளத்தில் ஸ்டேபிலிட்டி மற்றும் ஆப் கம்பேடிபிலிட்டி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 11 பீட்டா வழங்கும் முதன்மை நிறுவனமாக ஒன்பிளஸ் இருக்கிறது. 

    ஆண்ட்ராய்டு 11 பீட்டா 2

    ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் டெவலப்பர்கள் மற்றும் மிக விரைவில் பயன்படுத்த நினைப்போருக்கானது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த இயங்குதளம் அன்றாட பயன்பாட்டுக்கான சாதனத்தின் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தெரிவித்து உள்ளது.

    ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 11 டெவலப்பர் பிரீவியூ 2 இன்ஸ்டால் செய்ய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களில் குறைந்த பட்சம் 30 சதவீத பேட்டரி மற்றும் குறைந்த பட்சம் 3 ஜிபி மெமரி இருக்க வேண்டும்.
    Next Story
    ×