search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி ஏ41
    X
    கேலக்ஸி ஏ41

    5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ42 ஸ்மார்ட்போன் சீனாவின் 3சி வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.  அதன்படி புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் இது அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. 

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-A426B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த மாடல் 4860 எம்ஏஹெச் பேட்டரியுடன் சீன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி EB-BA426ABY எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது 5000 எம்ஏஹெச் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    கேலக்ஸி ஏ41

    முந்தைய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஏ42 ஸ்மார்ட்போன் SM-A426B மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மேலும் இது அடுத்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போதைய தகவலில் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி விவரங்கள் வெளியாகி உள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் முன்னதாக அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ41 மாடடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். கேலக்ஸி ஏ41 மாடலில் 3500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய மாடலில் 5ஜி வழங்கப்படுவதால் அதிக திறன் கொண்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.

    5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுவதால் இந்த சற்றே தடிமனாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. போதுமான இடவசதியின்மை காரணமாக புதிய கேலக்ஸி ஏ42 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுவதாக தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    Next Story
    ×