என் மலர்
மொபைல்ஸ்
சியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசரை சியோமி வெளியிட்டு இருந்தது.
தற்சமயம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் புளூ, கோரல் ஆரஞ்சு, காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய கோரல் ஆரஞ்சு நிற ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே கிடைக்கும் நிறங்களின் விலையிலேயே கிடைக்கும் என தெரிகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் ஹெச்டிஆர் வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது.
முன்புறம் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் மேம்பட்ட கேமரா மற்றும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் எம்ஐ10 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் எம்ஐ10 5ஜி ஸ்மார்ட்போனினை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து சியோமி நிறுவனம் விரைவில் எம்ஐ10 சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் எம்ஐ10 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் உலகின் மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஐ10 அல்ட்ரா மாடல், ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இருக்கும் என சியோமி இணை நிறுவனர் லெய் ஜூன் தெரிவித்து இருக்கிறார்.
இத்துடன் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எம்ஐ10 அல்ட்ரா மாடலில் 120 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடல் செராமிக் பேக் மற்றும் டிரான்ஸ்பேரன்ட் பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. செராமிக் எடிஷன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய எம்ஐ10 அல்ட்ரா டிரான்ஸ்பேரன்ட் வேரியண்ட் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி எக்ஸ்3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்3 மற்றும் எக்ஸ்3 ஜூம் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி பிராண்டு எக்ஸ்3 ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
RMX2083 மாடல் நம்பர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதே சிப்செட் ரியல்மி எக்ஸ்3 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதே அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் டியுவி ரெயின்லாந்தில் லீக் ஆகி இருந்தது. அங்கு இந்த மாடல் RMX2170 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்து.
ரியல்மி எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் செல் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை செல் கொண்ட 4200 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. எனினும், இதுபற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்தி உள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்து பிக்சல் 5 ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது.
அந்த வரிசையில் தற்சமயம் பிக்சல் 4 சீரிஸ் - பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்துவதை உறுதி செய்திருக்கிறது. தற்சமயம் இரு ஸ்மார்ட்போன்களும் அமெரிக்காவுக்கான கூகுள் ஸ்டோர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படவில்லை.
இதனால் இரு மாடல்களும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க முடியும். பிக்சல் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூகுள் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனால் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மட்டும் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து உள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இதன் 6 ஜிபி ரேம் மாடல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் முந்தைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் கேலக்ஸி ஏ51 மாடலின் 8 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஹெச்எஸ்பிசி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிய விலை குறைப்பின் படி இந்த ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 22499 என மாறி உள்ளது.

தற்சமயம் கேலக்ஸி ஏ51 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23999 என மாறி இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 25999 என மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் இதே விலையில் ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
பின் ஏப்ரல் மாதம் ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், இதன் விலை ரூ. 1251 வரை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மே மாதத்தில் கேலக்ஸி ஏ51 மாடலின் 8 ஜிபி ரேம் வெர்ஷன் ரூ. 27999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 25999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு முன்னணி வலைதளங்கள் மற்றும் சாம்சங் இந்தியா இ ஸ்டோரில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கி உள்ளது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவு சாம்சங் ஆன்லைன், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
இத்துடன் இரு மாடல்களுக்கும் விரைவில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் இதர வலைதளங்களில் விரைவில் முன்பதிவு துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விலை விவரம்:
சாம்சங் கேலக்ஸி நோட் 20 4ஜி 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 77999
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 104999
சாம்சங் கேலக்ஸி நோட் 20 4ஜி மாடல் மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் கிரீன் நிறங்களிலும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல் மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஏர்டெல், ஜியோவின் இசிம் வசதி கொண்டிருக்கிறது. விரைவில் வோடபோன் இசிம் வசதி வழங்கப்பட இருக்கிறது.
கேலக்ஸி நோட் 20 4ஜி மற்றும் நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்கள் எக்சைனோஸ் 990 பிராசஸர் கொண்டிருக்கின்றன. மற்ற சந்தைகளில் இரு மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
அறிமுக சலுகை
- கேக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்வோர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் வாங்கவிட வேண்டும்.
பலன்களை வாடிக்கையாளர்கள் சாம்சங் ஷாப் செயலியில் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், கேலக்ஸி பட்ஸ் லைவ், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி டேப் உள்ளிட்டவற்றை வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 20 மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை வாங்குவோருக்கு ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விர்ச்சுவல் நிகழ்வில் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மாடலில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கவர் டிஸ்ப்ளேவில் பன்ச் ஹோல் கேமராவும், வெளிப்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டு உள்ளது.

இரண்டாம் தலைமுறை கேல்கஸி இசட் ஃபோல்டு மாடலின் ஹின்ஜ் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சாம்சங் அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. சாம்சங் சார்பில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், மிஸ்டிக் பிரான்ஸ் மற்றும் தாம் பிரவுன் எடிஷனில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை பின்னர் அறிவிப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கேலக்ஸி அன்பேக்டு டிஜிட்டல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2எக்ஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் / எக்ஸைசனோஸ் 990 பிராசஸர், குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 / எக்சைனோஸ் மோடெம் 5123 மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்லா வைடு சென்சார், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 10 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா சிறப்பம்சங்கள்
- 6.9 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் 3088×1440 பிக்சல் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ 7என்எம் பிராசஸர்
- அட்ரினோ 650 ஜிபியு
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
- எல்டிஇ - 8ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5ஜி – 12ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி/256ஜிபி/512ஜிபி (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 108 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, PDAF, OIS
- 12 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், f/3.0, PDAF, OIS
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- ப்ளூடூத் சார்ந்த எஸ் பென்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் பவர் ஷேர்
சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா விலை இந்திய மதிப்பில் ரூ. 97230 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 125860 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
லாவா நிறுவனம் இசட்66 எனும் பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லாவா ஸ்மார்ட்போனில் 6.08 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்பிரெட்ரம் ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் புதிய லாவா இசட்66 மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வருகிறது. கேமராக்களை பொருத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி டெப்த் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் யுஎஸ்பி 2.0 மற்றும் 3950 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

லாவா இசட்66 சிறப்பம்சங்கள்
- 6.08 இன்ச் 1560x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பிரெட்ரம் ஆக்டாகோர் பிராசஸர்
-3 ஜிபி DDR4 ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
- 5 எம்பி கேமரா
- 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி 2.0
- 3950 எம்ஏஹெச் பேட்டரி
புதிய லாவா இசட்66 ஸ்மார்ட்போன் மரைன் புளூ, பெரி ரெட் மற்றும் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7777 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி 9 பிரைம் சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ஏஆர்எம் மாலி-ஜி52 2இஇஎம்சி2 ஜிபியு
- 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5020 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் புளூ, மின் கிரீன், சன்ரைஸ் ஃபிளேர் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோபோக்கஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏஐ அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார்
- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 3140 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் இதன் விற்பனை அக்டோபரில் துவங்கும் என்றும் இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற இருக்கும் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த தலைமுறை எம்ஐயுஐ 12 அப்டேட்டினை வெளியிட்டு வருகிறது. பெரும்பாலான ரெட்மி மற்றும் போக்கோ சாதனங்களுக்கு எம்ஐயுஐ12 அப்டேட் வழங்கப்படும் என்றாலும், இவை அனைத்திற்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படாது.
ஆண்ட்ராய்டு 11 ஸ்டேபில் வெர்ஷன் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சியோமி ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 11 இயங்குதளத்தை வெளியிட துவங்கும். எம்ஐயுஐ மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்க சியோமி வரையறைகளை பின்பற்றி வருகிறது.
அந்த வகையில் சியோமியின் ஃபிளாக்ஷிப் எம்ஐ சீரிஸ் இரண்டு ஆண்ட்ராய்டு அப்கிரேடுகளை பெறும். ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களுக்கு ஒரு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற இருக்கும் சாதனங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சியோமியின் எம்ஐ 10, எம்ஐ 10 ப்ரோ, எம்10 யூத் எடிஷன், எம்ஐ சிசி9 ப்ரோ, எம்ஐ நோட் 10 சீரிஸ், எம்ஐ நோட் 10 லைட், எம்ஐ 10 லைட் 5ஜி மற்றும் எம்ஐ ஏ3 போன்ற மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதேபோன்று எம்ஐ 9, எம்ஐ 9 ப்ரோ 5ஜி, எம் 9 எஸ்இ, எம்ஐ சிசி9 / எம்ஐ 9 லைட் மற்றும் எம்ஐ சிசி9 மெய்டூ எடிஷன் உள்ளிட்ட மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
இத்துடன் ரெட்மி கே30 ப்ரோ / போக்கோ எஃப்2 ப்ரோ, ரெட்மி கே30 / போக்கோ எக்ஸ்2, ரெட்மி கே3- 5ஜி, ரெட்மி கே30 ரேசிங் எடிஷன், ரெட்மி கே30ஐ 5ஜி, ரெட்மி 10எக்ஸ் ப்ரோ, ரெட்மி 10எக்ஸ் 5ஜி, ரெட்மி 9, ரெட்மி 9சி, ரெட்மி 9ஏ, போக்கோ எம்2 ப்ரோ போன்ற மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.






