என் மலர்
மொபைல்ஸ்
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சியான் மற்றும் சேன்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 5.3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
- 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி இரண்டாவது சென்சார்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி
- ப்ளூடூத், வைபை
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- எஃப்எம் ரேடியோ
சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய சி12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 8999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரியல்மி சி12 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் துவங்க இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ. 8399 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்11 மாடலுடன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்
- 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- அட்ரினோ 505 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- டூயல் சிம்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மோட்டோரோலா வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மோட்டோரோலா மோட்டோ இ7 பிளஸ் இருக்கிறது. முன்னதாக மோட்டோ இ7 விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662 மற்றும் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்களுடன் குவால்காம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் 11 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. இதன் சிபியு 8 கோர்கள் மற்றும் 1.8 ஜிகாஹெர்ட்சில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் அட்ரினோ 610 ஜிபியு வழங்கப்படுகிறது.
இந்த பிராசஸர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ இ7 பிளஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா மற்றும் இரண்டாவது சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 5000எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடி சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகையின் கீழ் விவோ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை இன்று (ஆகஸ்ட் 16) நிறைவு பெற இருக்கிறது.

அந்த வகையில் விவோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் விவோ எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 49,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று விவோ எக்ஸ்50 மாடல் ரூ. 34990 மற்றும் ரூ. 37990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான விவோ வி19 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் ரூ. 24990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
4ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய நோக்கியா ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது எஃப்சிசி வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதில் எல்டிஇ பேண்ட் 5, 7 மற்றும் 38 உள்ளிட்டவற்றுக்கான வசதி, 1150 எம்ஏஹெச் பேட்டரி, 3.7 விடிசி பவர் ரேட்டிங் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சங்களை பொருத்தவரை இது பட்ஜெட் விலையில் ஃபீச்சர் போன் மாடலாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய நோக்கியா மொபைலின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் மற்றும் நோக்கியா பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதன் வடிவத்தை வைத்தே இது ஃபீச்சர் போன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதுதவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய பட்ஜெட் ரக மாடலான சி12 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ரியல்மி சி15 ஏற்கனவே இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபி8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மரைன் புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தோனேசிய சந்தையில் இதன் விலை 128 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9588 என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஐடெல் நிறுவனம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விஷன் 1 எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.088 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் எஸ்சி9863ஏ பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்
- 6.088 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 0.3 எம்பி டெப்த் சென்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பின்புறம் கைரேகை சென்சார்
- 4ஜி, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் விஷன் 1 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 18 ஆம் தேதி துவங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முன்னதாக மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
முன்னதாக கடந்த மாதம் வெளியான ரென்டர்களின் படி புதிய தலைமுறை மோட்டோ ஸ்மார்ட்போன் ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இதில் கைரேகை சென்சார் கீழ்புறத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி வசதி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க சாம்சங்கின் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் குவிக் வியூ டிஸ்ப்ளே சார்ந்த புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக ஒப்போ சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், சமீபத்தில் இதன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டது. விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலை மீண்டும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 27990 என மாறி உள்ளது. முனனதாக இதன் விலை ரூ. 29990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோன்று 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29990 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அந்த வகையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 மாடலின் புது வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 3 மாடலினை இந்தியாவில் கடந்த மாதம் அறஇமுகம் செய்தது. ரோக் போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் புது வடிவமைப்பு கொண்ட காப்பர் 3டி வேப்பர் சேம்பர், பெரிய கிராஃபைட் பிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோக் போன் 2 மாடலில் உள்ளதை விட ஆறு மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
அசுஸ் ரோக் போன் 3 மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வோல்ட் 3ஏ 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என சாம்சங் தெரிவித்து உள்ளது.
முன்பதிவு செய்யாதவர்கள் கேலக்ஸி நோட் 20 அல்லது கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் வாங்கிட முடியும். புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க இதுவரை சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த வாரம் நடைபெற்ற 2020 கேலக்ஸி அன்பேக்டு விர்ச்சுவல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடலை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி எனும் ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடல் விலை ரூ. 77999 முதல் துவங்குகிறது. கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி 256 ஜிபி மாடல் விலை ரூ. 104999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






