search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் நார்டு
    X
    ஒன்பிளஸ் நார்டு

    இணையத்தில் லீக் ஆன புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் மாடலான ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு மாடலில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. 

    புதிய ஒன்பிளஸ் நார்டு வெளியான சில வாரங்களுக்குள் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பில்லி எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் எஸ்எம்350 எனும் பார்ட் நம்பர் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், 5ஜி வசதி வழங்கப்பட இருக்கிறது. ஆக்சிஜன் ஒஎஸ் செட்டிங்ஸ் ஏபிகே விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பிஇ2025, பிஇ2026, பிஇ2028 மற்றும் பிஇ 2029 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் நார்டு

    சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நார்டு சீரிசில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இதுதவிர அமெரிக்க சந்தைக்கென பிரத்யேக நார்டு ஸ்மார்ட்போனினை ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புகிய ஸ்மார்ட்போன் தற்போதைய மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இதே மாடல் இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் அறிமுகமாகும் என தெரிகிறது.
    Next Story
    ×