என் மலர்
தொழில்நுட்பம்
- சாம்சங் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை.
- புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதைத் தொடர்ந்து கேலக்ஸி S23 FE மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கின. அதன்பிறகு லீக் ஆன ஏராளமான தகவல்களை கொண்டு இந்த மாடல் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்பட்டு வருகிறது.
முன்னதாக கேலக்ஸி S21 FE மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. தற்போது கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் கொரியாவில் இருந்து வெளியாகி உள்ளன.
அதன்படி கேலக்ஸி S23 FE மாடலின் பேட்டரி விவரங்கள் சேஃப்டிகொரியா சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர கேலக்ஸிகிளப் வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி EB-BS711ABY எனும் மாடல் நம்பர் கொண்டிரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் SM-S711 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 50MP+ 12MP+ 12MP கேமரா சென்சார்கள், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- சியோமி பேட் 5 மாடல் இரண்டு வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேட் 6 ஆன்ட்ராய்டு டேப்லெட் மாடலை நாளை (ஜூன் 13) அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டேப்லெட் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி பேட் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் சியோமி பேட் 5 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சியோமி பேட் 5 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 1000, 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 500 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் புதிய சியோமி பேட் 5 மாடலை முறையே ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி பேட் 5 அம்சங்கள்:
புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான ஆப்ஷன்களை இயக்க முடியும். சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.
ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.
- இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?
ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.
வெரிஃபைடு பெற தேவையானவை:
இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.
பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
- இந்திய சந்தையில் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்கள், ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் இந்திய விலையை குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி S22 விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் போரா பர்பில், கிரீன், ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் பின்க் கோல்டு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

விலை குறைப்பு விவரங்கள்:
விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இதன் விலை தற்போது ரூ. 64 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.
இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் இந்த ஸ்மார்ட்போனிற்கு கூடுதலாக ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 54 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதன் விற்பனை அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S22 அம்சங்கள்:
6.1 இன்ச் full HD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ 4.1, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 3700 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.
- வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
- கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கினார் எலான் மஸ்க்.
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
"கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது.
- ஹாமர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
ஹாமர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் உறுதியான மெட்டாலிக் பாடி மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டுள்ளது.
இத்துடன் 1.85 இன்ச் அளவில் பெரிய ஸ்கிரீன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் ஏராளமான உடல்நலம் டிராக் செய்யும் வசதிகள்- இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மாதவிடாய், SpO2 போன்ற வசதிகள் உள்ளன. மேலும், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹாமர் ஃபிட் பிளஸ் அம்சங்கள்:
1.85 இன்ச் 240x286 பிக்சல் டிஸ்ப்ளே
100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ப்ளூடூத் காலிங்
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், இன்பில்ட் கேம்ஸ்
பாஸ்வேர்டு ப்ரோடெக்ஷன், DND
ஸ்டாப்வாட்ச், ரெய்ஸ்-டு-வேக்
இரத்த அழுத்தம், SpO2, மாதவிடாய் மற்றும் இதய துடிப்பு மாணிட்டரிங் வசதி
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
அதிகபட்சம் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹாமர் ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 399 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 11 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
- புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
- இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. பிராஜக்ட் 92 பெயரில் உருவாகி வரும் புதிய செயலி பற்றிய முன்னோட்டம் அந்நிறுவன ஊழியர்களுக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி எப்படி காட்சியளிக்கும் என்பதை கூறும் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும், புதிய செயலி த்ரெட்ஸ் (threads) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி புதிய செயலியின் இன்டர்ஃபேஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதில் புகைப்படங்கள் காணப்படவில்லை.

மெட்டா நிறுவனத்தின் மூத்த பிராடக்ட் அலுவலர் க்ரிஸ் கோக்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, புதிய சமூக வலைதள செயலி ஆக்டிவிட்டிபப் சோஷியல் நெட்வொர்க்கிங் ப்ரோடோகாலை (ActivityPub social networking protocol) பயன்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை புதிய பிளாட்ஃபார்மிற்கும் கொண்டு செல்ல முடியும்.
இந்த செயலி டுவிட்டர் தளத்திற்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரோஃபைல் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தளத்தை பயன்படுத்துவதற்காக மெட்டா நிறுவனம் பல்வேறு பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
புதிய செயலியை உருவாக்குவதற்கான பணிகள் ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: The Verge
- இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.
- இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.
ரெட்மி G27 மற்றும் G27Q கேமிங் மானிட்டர்களை தொடர்ந்து சியோமியின் துணை பிராண்டு ரெட்மி முற்றிலும் புதிய மற்றும் குறைந்த விலை மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ரெட்மி A27Q என்று அழைக்கப்படுகிறது. இதில் 2K ரெசல்யூஷன் மற்றும் IPS ஸ்கிரீன் உள்ளது.
ரெட்மி A27Q 2K IPS அம்சங்கள்:
புதிய ரெட்மி A27Q 2K IPS மானிட்டர் அன்றாட பணிகளை மேற்கொள்ளவும், பொழுதுபோக்கு சார்ந்த பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள IPS ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் தலைசிறந்த விஷூவல்களை அதன் உண்மை நிறங்களில் பிரதிபலிக்கிறது. இந்த மானிட்டரில் 3 மைக்ரோ-எட்ஜ் டிசைன் மற்றும் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் உள்ளது.

இத்துடன் HDR 10 சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இது தரவுகளுக்கு டெப்த் மற்றும் தரத்தை மேம்படுத்தி காண்பிக்கிறது. இதில் 8-பிட் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத sRGB சப்போர்ட், 95 சதவீதம் DCI-P3 சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் இந்த மானிட்டர் அதிகளவு பிரகாசமாகவும், அதிக உண்மைத்தன்மை கொண்ட நிறங்களை காண்பிக்கிறது.
ரெட்மி A27Q மானிட்டரில் 75Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் ப்ளூ லைட் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இது கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. இதன் மூலம் நீண்ட நேரம் மானிட்டரை பயன்படுத்த முடியும். கனெக்டிவிட்டிக்கு DPI.4 இன்டர்ஃபேஸ், HDMI இன்டர்ஃபேஸ், யுஎஸ்பி ஏ இன்டர்ஃபேஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் உள்ளது.
இதில் உள்ள யுஎஸ்பி சி இன்டர்ஃபேஸ் 65 வாட் ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த மானிட்டரை வால் மவுன்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை 869 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 047 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- ஐடெல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நிறம் மாறும் பேக் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய S23 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஐடெல் S23 மாடலில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T606 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் ஐடெல் S23 மிஸ்ட்ரி வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் பின்புறம் உள்ள பேக் பேனல் சூரிய வெளிச்சம் அல்லது யு.வி. லைட் உள்ள பகுதியில் காண்பிக்கப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை யுஎஸ்பி டைப் சி போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.
ஐடெல் S23 அம்சங்கள்:
6.6 இன்ச் 720x1600 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
மாலி G57 MP1 GPU
8 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
ஏ.ஐ. கேமரா
8MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐடெல் S23 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் மிஸ்ட்ரி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 14 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம் வசதியுடன்) ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என ஐடெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
- ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.
ஜியோடேக் அம்சங்கள்:
ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.
ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.
ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.
ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.
விலை விவரங்கள்:
ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.
ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம்.
- மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது.
- வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்படுகிறது.
சமூக வலைதள நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற முன்னணி தளங்களை வைத்திருக்கிறது. டுவிட்டர் நிறுவனம் துவங்கி வைத்த கட்டண முறையிலான வெரிஃபைடு சேவையை தற்போது மெட்டாவும் கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மெட்டா வெரிஃபைடு சேவையை பெற மொபைல் செயலிகளுக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான வெரிஃபைடு சேவை மாதம் ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது.
"மெட்டா வெரிஃபைடு சேவை இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் நேரடியாக விற்பனைக்கு கிடைக்கிறது. ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 699. வரும் மாதங்களில் வலைதளங்களுக்கான மெட்டா வெரிஃபைடு சேவை ரூ. 599 விலையில் வழங்கப்பட இருக்கிறது," என மெட்டா தெரிவித்துள்ளது.
"முதற்கட்டமாக பல்வேறு உலக நாடுகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மெட்டா வெரிஃபைடு சோதனையை இந்தியாவுக்கும் நீட்டிக்கிறோம். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வெரிஃபைடு பேட்ஜ்களை தொடர்ந்து வழங்குவோம்," என்று மெட்டா மேலும் தெரிவித்துள்ளது.






