என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், அதிவேக 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதன் அம்சங்கள் ஆகும். இந்திய சந்தையில் ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10R மாடல், ஸ்மார்ட்போன் வல்லுனர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்த நிலையில், ஒன்பிளஸ் 10R வாங்க நினைத்தோர், தற்போது இந்த மாடலை வாங்க நல்ல தருணம் உருவாகி இருக்கிறது. ஒன்பிளஸ் கம்யுனிட்டி சேல் எனும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனிற்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 42 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இத்துடன் ஒன்பிளஸ் 10R எண்டூரன்ஸ் எடிஷன் ரூ. 43 அயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வந்தது.

    தற்போது கம்யுனிட்டி சேல் விற்பனையின் கீழ் ஒன்பிளஸ் 10R மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் கூப்பன் வடிவில் ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஐசிஐசிஐ மற்றும் ஒன் மெட்டல் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகளை தொடர்ந்து ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் ரூ. 32 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும்.

    ஒன்பிளஸ் 10R அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 10R மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், HDR 10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ், 5ஜி, டூயல் பேண்ட் வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் சார்ஜிங் வசதி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    • இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும்.
    • இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஸ்னாப்சாட் தளத்தில் 'மை ஏஐ' சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை ஆகும்.

    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதை ஆப் ஆய்வாளரான அலெசாண்ட்ரோ பலூசி கண்டறிந்தார். இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும் என தெரியவந்துள்ளது. பயனர்கள் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பண்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    பபயனர்கள் தங்களை பற்றி சிறப்பாக வெளிப்படுத்தவும், மெசேஜ்களை எழுத உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நினைக்கிறது. இது பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி அறிவுறையாக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் இன்னமும், உருவாக்கும் பணிகளே நடைபெற்று வருகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    இன்ஸ்டாகிராம் தளத்தில் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்னாப்சாட் பயனர்கள் ஏஐ சாட்பாட் உடன் உரையாடல் நடத்தவும், கேள்விகளை கேட்கவும் முடியும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கொண்டு தான் இந்த தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
    • இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.

    போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.

    மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

    இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    • இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
    • கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் தனது முற்றிலும் புதிய 4K மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாணிட்டர்கள் அல்ட்ராகியர் 27GR93U மற்றும் அல்ட்ராகியர் 32GR93U என்று அழைக்கப்படுகின்றன. பெயருக்கு ஏற்றார்போல் இரு மாணிட்டர்களிடையேயான வித்தியாசம் அவற்றின் ஸ்கிரீன் அளவுகள் தான் எனலாம்.

    எல்ஜி 27GR93U மாடலில் 27 இன்ச் பேனலும், அல்ட்ராகியர் 32GR93U மாடலில் 31.5 இன்ச் அகலம் கொண்ட பெரிய டிஸ்ப்ளேவும் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன், 3840x2160 பிக்சல்கள், 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த மாணிட்டரில் IPS பேனல், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. இத்துடன் 1 ms GtG வரையிலான ரெஸ்பான்ஸ் டைம் உள்ளது. இதன் மூலம் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கும்.

    இரண்டு மாணிட்டர்களிலும் AMD FreeSync பிரீமியம் மற்றும் NVIDIA G-Sync சப்போர்ட் உள்ளது. இவை சீரான கேம்பிளே அனுபவம் வழங்க செய்கிறது. இத்துடன் கனெக்டிவிட்டிக்கு டிஸ்ப்ளே போர்ட் 1.4, இரண்டு HDMI 2.1 போர்ட்கள், யுஎஸ்பி 3.0 ஹப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட ஸ்டாண்டுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய எல்ஜி அல்ட்ராகியர் மாணிட்டர்கள் எல்ஜி பிரிட்டன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளன. இதுபற்றிய இதர விவரங்கள் இடம்பெறவில்லை. 

    • சாம்சங் கேலக்ஸி F54 5ஜி மாடல் எக்சைனோஸ் 1380 சிப்செட் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகள் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் கேலக்ஸி A54 மாடலில் உள்ளதை போன்றே எக்சைனோஸ் 1380 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், கேலக்ஸி F54 5ஜி மாடலில் 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED பிளஸ் ஸ்கிரீன், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1 கொண்டிருக்கும் கேலக்ஸி F54 5ஜி மாடல் நான்கு ஒஎஸ் அப்டேட்கள், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படவுள்ளன.

    சாம்சங் கேலக்ஸி F54 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி O டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் எக்சைனோஸ் 1380 பிராசஸர்

    மாலி G68 MP5 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 5.1

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்

    2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    6000 எம்ஏஹெச் பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போன் மீடியோர் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 27 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    • இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும்.
    • ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) துவங்கியது. ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் துவங்கிய WWDC 2023 நிகழ்வில் புதிய லேப்டாப், பிராசஸர், ஒஎஸ் வெர்ஷன்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. அந்த வகையில், 2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    15-இன்ச் மேக்புக் ஏர்: 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் மாடல் ஆகும். முழு சார்ஜ் செய்தால் இந்த லேப்டாப்பை அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன.

    மேக் ஸ்டூடியோ: ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் மற்றும் M2 அல்ட்ரா சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மேக் ப்ரோ: யாரும் எதிர்பாராத நிலையில், ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் மூலம் அப்டேட் செய்து இருக்கிறது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.

    ஹார்டுவேரை தொடர்ந்து சாஃப்ட்வேர் அறிவிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறலாம்.

    ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ்-இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய ஆஃபர் வழங்கப்படுகிறது.

    விஷன்ப்ரோ ஹெட்செட்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும். இந்த சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்புடன், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. 

    • புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரியுடன் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ மாடலின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வில் தனது மேக் ப்ரோ மாடலை முற்றிலும் புதிய M2 அல்ட்ரா சிப்செட் உடன் அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மேக் ப்ரோ மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மூன்று மடங்கு அதிவேகமானது ஆகும். M2 அல்ட்ரா கொண்ட மேக் ப்ரோ மாடலில் 24-கோர் சிபியு மற்றும் 76-கோர் ஜிபியு, இருமடங்கு ரேம் மற்றும் எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக் ப்ரோ மாடல் 192 ஜிபி மெமரி மற்றும் 800 ஜிபி வரையிலான யுனிஃபைடு மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் வாங்கிட முடியும். இத்துடன் அதிகபட்சம் ஏழு ஆஃப்டர்பர்னர் கார்டுகள் புதிய மேக் ப்ரோவில் வழங்கப்பட்டு உள்ளன. இது 8K ப்ரோ ரெஸ் தரம் கொண்ட 22 வீடியோக்களை ஸ்டிரீம் செய்யும். இதில் நான்கு தண்டர்போல்ட் 4 போர்ட்கள் உள்ளன.

    இந்த மேக் ப்ரோ மாடல் ஆறு ப்ரோ டிஸ்ப்ளே XDR-க்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. யுஎஸ்பி ஏ போர்ட்கள், இரண்டு அதிக பேண்ட்வித் கொண்ட HDMI போர்ட்கள், இரண்டு 10GB ஈத்தர்நெட் போர்ட்கள், ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய மேக் ப்ரோ (டவர் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் மேக் ப்ரோ (ரேக் என்க்லோஷர்) மாடல் விலை ரூ. 7 லட்சத்து 79 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை ஜூன் 13 ஆம் தேதி துவங்குகிறது.

    • புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். மற்றும் வி.ஆர். செயலிகளை சப்போர்ட் செய்கிறது.
    • குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் WWDC 2023 நிகழ்வில் வைத்து அறிவிக்கப்பட்டது. ஆப்பிள் விஷன் ப்ரோ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெட்செட் பற்றிய தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    புதிய விஷன் ப்ரோ ஹெட்செட் ஏ.ஆர். எனப்படும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர். எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி செயலிகளை சப்போர்ட் செய்கிறது. தனித்துவம் மிக்க டிசைன் கொண்டிருக்கும் விஷன் ப்ரோ மாடலை கட்டுப்படுத்துவதற்கு பிரத்யேக கண்ட்ரோலர் போன்று எந்த சாதனமும் தேவையில்லை. இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் மற்றும் கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இதனை இயக்கி விட முடியும்.

    இதுதவிர ஆப்பிள் உருவாக்கி இருக்கும் ஐசைட் (Eyesight) எனும் அம்சம் வெளிப்புற டிஸ்ப்ளே மற்றும் ஹெட்செட் உள்புறத்தில் இருக்கும் கேமராக்களை கொண்டு ஹெட்செட் பயன்படுத்துவோரின் உணர்வுகளை மற்றவர்களுக்கு காண்பிக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் விஷன் ப்ரோ அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள டிஜிட்டல் கிரவுன் கொண்டு பயனர்கள் எந்த அளவுக்கு மெய்நிகர் அனுபவத்தை பெற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள முடியும். இத்துடன் அனைவரின் தலையிலும் எளிதில் பொருந்தும் வகையில் பல்வேறு அளவுகளில் இந்த ஹெட்செட்-இன் ஹெட் பேண்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அணிபவருக்கு மென்மையாகவும், அதிக சவுகரியத்தை கொடுக்கும் வகையிலும், எளிதில் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலும் இருக்கிறது.

    விஷன் ப்ரோ மாடலின் ஹெட்பேண்ட்-இல் டூயல் டிரைவர் ஆடியோ பாட்கள் உள்ள. இவை பயனர்களுக்கு ஸ்பேஷியல் ஆடியோ தொழிநுட்பத்தை வழங்குகின்றன. ஹெட்செட் எடையை மேலும் குறைப்பதற்காக விஷன் ப்ரோ மாடலில் வெளிப்புற பேட்டரி யூனிட் உள்ளது. வயர் மூலம் பேட்டரி மற்றும் ஹெட்செட் இணைக்கப்பட்டு உள்ளது.

    கேமராவை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் மூன்று எலிமெண்ட் லென்ஸ்கள், ஹை-ரெஸ் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் இரண்டு IR கேமராக்கள், LED இலுமினேஷன்கள் உள்ளன. இந்த சாதனம் LiDAR மற்றும் வழக்கமான கேமரா சென்சார்களையும் பயன்படுத்துகிறது. இந்த ஹெட்செட் ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ஒஎஸ் மூலம் இயங்குகிறது. இது முற்றிலும் புதிய R1 சிப் மற்றும் M2 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

    சஃபாரி போன்ற செயலிகளை பயன்படுத்திக் கொண்டே, நிஜ உலகில் மனிதர்களுடன் உரையாட முடியும். வீட்டிற்குள் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ சாலைகளிலும் பயன்படுத்த முடியும். விஷன் ப்ரோ ஹெட்செட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிக கேம்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது.

    • புதிய ஐஒஎஸ்-இல் சிரி சேவையை இயக்க ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதும்.
    • புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐஒஎஸ் 17 வெர்ஷன் அறிவிக்கப்பட்டது. புதிய ஐஒஎஸ்-இன் பெரும்பாலான செயலிகளில் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி இன்கமிங் அழைப்புகளில் தற்போது ஒவ்வொரு காண்டாக்டிற்கும் குறிப்பிட்ட போஸ்டர்களை செட் செய்து கொள்ள முடியும். வாய்ஸ்மெயில் சேவையில் கூகுள் ஏற்கனவே வழங்குவதை போன்றே வாய்ஸ்மெயில் தகவல்களை எழுத்து வடிவில் காண்பிக்கிறது.

    மெசேஜஸ் அம்சத்தில் மிக எளிமையாக பதில் அனுப்புவது, ஆடியோ மெசேஜ்களுக்கு எழுத்து வடிவம் பெறுவது, இன்-லைன் லொகேஷன் விவரங்கள் மற்றும் செக்-இன் வசதி உள்ளது. இத்துடன் ஃபேஸ்டைமில் நேரலை தகவல்களை வழங்க முடியும். இத்துடன் ஸ்டிக்கர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் எமோஜிக்களை ஸ்டிக்கர் மற்றும் எஃபெக்ட்களாக மாற்ற முடியும்.

    சிரி சேவையை இயக்க இனி ஹே சிரி என்று அழைக்காமல், சிரி என்று மட்டும் கூறினாலே போதுமானது. மேலும் ஒவ்வொரு முறையும் கமாண்ட் செய்யாமல், அடுத்தடுத்த கேள்விகளை கேட்க சிரி அதற்கு பதில் அளிக்கும். புதிய ஐஒஎஸ்-இல் ஷேரிங்கும் மிக எளிமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன் நேம்டிராப் அம்சம் கொண்டு பயனர்கள் காண்டாக்ட் விவரங்களை அவர்களது ஐபோனினை மற்றவர் ஐபோன் அருகில் கொண்டு சென்றாலே பரிமாறிக் கொள்ளலாம். இதே போன்று புகைப்படங்களையும் மிக எளிதில் ஷேர் செய்யலாம்.

    புதிய ஐஒஎஸ்-இல் டைப்பிங் செய்வதும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக ஏ.ஐ. சார்ந்த மாடலிங் ஆட்டோகரெக்ஷன் வசதியை வழங்குகிறது. டைப் செய்யும் போது ஏதேனும் புரியாத வார்த்தை இருப்பின், அதனை ஐஒஎஸ் 17 கண்டறிந்துவிடுகிறது. புதிய ஐஒஎஸ் 17-இல் உள்ள ஜர்னல் ஆப் கொண்டு பயனர்கள் அவர்களது உணர்வுகளை பதிவு செய்ய முடியும். 

    • ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.

    • மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உள்ளது.
    • புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் சக்திவாய்ந்த M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் 2023 டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023), முற்றிலும் புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 15.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலில் 8-கோர் சிபியு மற்றும் 10-கோர் ஜிபியு கொண்ட M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டச் ஐடி, மேஜிக் கீபோர்டு மற்றும் 18 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கப்பட்டுள்ளது.

    6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. புதிய மேக்புக் ஏர் 15 இன்ச் மாடல் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரிடிசைன் செய்யப்பட்ட 13 இன்ச் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    இத்துடன் இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. மேக்புக் ஏர் 15 இன்ச் மாடலும் முந்தைய வெர்ஷனை போன்றே மிட்நைட், ஸ்பேஸ் கிரே, ஸ்டார்லைட் மற்றும் சில்வர் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1299 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய சியோமி பேட் 6 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் தனது சியோமி பேட் 6 மாடல் இந்திய சந்தையில் ஜூன் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டேப்லெட் மாடல் வெளியீட்டை உணர்த்தும் டீசரை சியோமி இந்தியா வெளியிட்டு உள்ளது.

    டீசர்களின் படி புதிய சியோமி பேட் 6 மாடலில் கீபோர்டு டாக் மற்றும் சியோமி ஸ்மார்ட் பென் 2-ம் தலைமுறை மாடலும் அறிமுகமாகிறது. இத்துடன் பேட் 6 மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் சியோமி பேட் 6 மாடல் கிரே மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     

    சியோமி பேட் 6 அம்சங்கள்:

    11 இன்ச் 2880x1800 பிக்சல் 16:10 டிஸ்ப்ளே, 30/48/50/60/90/120/144Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்

    அட்ரினோ 650 GPU

    6 ஜிபி/8 ஜிபி ரேம்

    128 ஜிபி / 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயுஐ 14

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள்

    வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

    8840 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்த டேப்லெட் மாடல் அமேசான் மற்றும் Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.

    ×