என் மலர்
தொழில்நுட்பம்
- பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
- முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.
வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.
பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.
- நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.
நத்திங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் 2 அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மூலம் நத்திங் நிறுவனம் அமெரிக்க சந்தையில் களமிறங்குகிறது. நத்திங் போன் 2 சர்வதேச வெளியீட்டின் போதே இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் நத்திங் போன் 2 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய நத்திங் போன் 2 மாடலின் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் சில விவரங்களை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

எதிர்பார்க்கப்படும் விலை:
நத்திங் போன் 2 மாடல் ஒன்பிளஸ் 11R மற்றும் பிக்சல் 7a மாடல்களுக்கு போட்டியாக அமையும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி புதிய நத்திங் போன் 2 துவக்க விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். கடந்த ஆண்டு மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தப்பட்ட நத்திங் போன் 1 விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அம்சங்களை பொருத்தவரை புதிய நத்திங் போன் 2 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, Full HD+ ரெசல்யூஷன், OLED பேனல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
முந்தைய நத்தங் போன் 1 மாடலுடன் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை. இதே போன்றே புதிய நத்தங் போன் 2 மாடலுடன் சார்ஜர் வழங்கப்படாது என்றே தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
நத்திங் போன் 2 மாடலுக்கு மூன்று ஆண்டுகள் முக்கிய ஆண்ட்ராய்டு ஒஎஸ் அப்கிரேடுகள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் புதிய நத்திங் ஒஎஸ் பயனர்களுக்கு அதிவேக அனுபவம் மற்றும் புதிய அம்சங்களை வழங்கும் என்று தெரிவித்து இருக்கிறது.
- எல்ஜி நிறுவனம் தனது கிராம் சீரிஸ் லேப்டாப்களை அப்டேட் செய்து இருக்கிறது.
- 2023 கிராம் சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் உள்ளன.
எல்ஜி நிறுவனம் 2023 கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராம் சீரிஸ் மாடல்கள் பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அதிக விலை கொண்ட புதிய எல்ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் டாப் எண்ட் அம்சங்களை கொண்டிருக்கின்றன.
புதிய லேப்டாப்கள் எல்ஜி கிராம் 2023, கிராம் ஸ்டைல், கிராம் 2-இன்-1 மற்றும் எல்ஜி அல்ட்ரா பிசி என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் விண்டோஸ் 11 ஹோம் எடிஷன் ஒஎஸ், SSD ஸ்டோரேஜ், அதிகபட்சம் 17 இன்ச் ஸ்கிரீன், 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி கிராம் 2023 சீரிஸ் அம்சங்கள்:
எல்ஜி கிராம் 2023 மாடலில் இன்டெல் EVO சான்று பெற்ற 13th Gen கோர் பிராசஸர், LPDDR5 6000 MHz ரேம், மற்றும் Gen.4 NVMe (x2) ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 16:10 WQXGA IPS ஸ்கிரீன் மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
எல்ஜி கிராம் ஸ்டைல் மாடல், அதன் பெயருக்கு ஏற்றார்போல் மிகவும் ஸ்டைலான லேப்டாப் ஆகும். இதில் 14 இன்ச் WQXGA+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ் அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி NVMe SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் டால்பி அட்மோஸ் சப்போர்ட், 72 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
எல்ஜி கிராம் 2-இன்-1 மாடலில் 16 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதனை லேப்டாப் மற்றும் டேப்லெட் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இதில் 13th Gen இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், 32 ஜிபி LPDDR5 ரேம், 2 டிபி NVMe Gen4 SSD ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 80 வாட் ஹவர் பேட்டரி, 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
எல்ஜி அல்ட்ரா பிசி அதிக ரெசல்யூஷன் கொண்ட WUXGA டிஸ்ப்ளே, ஆன்டி கிளேர் IPS பேனல், 300 நிட்ஸ் பிரைட்னஸ், மெல்லிய பெசல்கள் உள்ளன. இந்த லேப்டாப் AMD ரைசன் 7000 சீரிஸ் பிராஸர், AMD ரேடியான் 7 கிராஃபிக்ஸ், 16 ஜிபி DDR4 ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 72 வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்:
எல்ஜி கிராம் 14 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம்
எல்ஜி கிராம் 16 இன்ச் மற்றும் 17 இன்ச் மாடல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் ஸ்டைல் துவக்க விலை ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990
எல்ஜி கிராம் 2-இன்-1 துவக்க விலை ரூ. 2 லட்சத்து 05 ஆயிரம்
எல்ஜி அட்ரா பிசி துவக்க விலை ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம்
- ஸ்மார்ட்போனின் முன்பதிவு, விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.
- கேலக்ஸி M34 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் சப்போர்ட் பேஜ் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு விரைவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. புதிய கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி M33 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
சாம்சங் இந்தியா வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதன் மூலம் கேலக்ஸி M34 5ஜி மாடல் உருவாகி இருப்பது உறுதியாகிவிட்டது. இவை தவிர இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை குறித்து வலைதளத்தில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சப்போர்ட் பேஜில் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M34 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி M34 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5 ஒஎஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது.
- வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்ய முடியாது.
வாட்ஸ்அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. மெசேஜ் டைப் செய்ய முடியாதவர்களுக்கு, ஆடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வந்தது. புதிய அப்டேட் மூலம் இனி ஆடியோ மெசேஜை கடந்து வீடியோ மெசேஜ்களையும் அனுப்ப முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக எடிட் பட்டன், சாட் லாக், ப்ரோஃபைல் படத்தை சிலருக்கு மட்டும் மறைத்து வைக்கும் வசதி, மல்டி-போன் சப்போர்ட் உள்ளிட்டவை விரைந்து வெளியிடப்பட்டன.

தற்போது வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 23.12.0.71 வெர்ஷன், ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.13.4 வெர்ஷனில் புதிய வீடியோ மெசேஜ் அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஆடியோ மெசேஜ் போன்றே புதிய வீடியோ மெசேஜ் அம்சத்தையும் எளிதில் இயக்க முடியும். ஒவ்வொரு சாட்களிலும் மைக்ரோபோன் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே வீடியோ ஐகான் இடம்பெறுகிறது. இதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மற்ற தரவுகளை போன்றே, வீடியோ மெசேஜ்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. அந்த வகையில் யாரும் வீடியோ மெசேஜ்களை பார்க்க முடியாது. வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் வசதி வழங்கப்படாது. எனினும், இதனை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்படுவதை வாட்ஸ்அப் தடுக்காது.
Photo Courtesy: wabetainfo
- ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் முன்பதிவு ஜூன் 8-ம் தேதி துவங்குகிறது.
- அறிமுக சலுகையாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்கி நடைபெறுகிறது. ரியல்மி இந்தியா வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த மாடலின் விற்பனை நடைபெற இருக்கிறது.
முன்னதாக ஜூன் 8-ம் தேதி இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 27 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பெய்க் மற்றும் ஒயசிஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
சலுகை விவரங்கள்:
ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடியும், தங்களின் பழைய ஸ்மார்ட்போனகளை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. எனினும், பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ. 500 வரை தள்ளுபடி பெறலாம்.

ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்:
6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்
8 ஜிபி, 12 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
200MP பிரைமரி கேமரா
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ சென்சார்
32MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- கூகுள் ஆப் வெர்ஷன் 14.24-ல் இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் உள்ளன.
- பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் வாட்ச் 2 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் வாட்ச் 2 மாடல் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன் படி ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர பிக்சல் வாட்ச் 2 மாடலின் சிறுவர் மட்டும் பயன்படுத்தும் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இது ஃபிட்பிட் பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கோப்புப்படம்
புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஆப் அப்டேட் வெர்ஷன் 14.24 இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களுக்கான குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டு பெயர்கள் அரோரா மற்றும் இயோஸ் ஆகும்.
இவை ரோமன் மற்றும் கிரேக்க பெயர்களுடன் தொடர்புடையவை ஆகும். இதில் ஒரு மாடல் எல்டிஇ மோடெம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் 41 மில்லிமீட்டர் கேஸ் வழங்கப்படுகிறது. இவை கூகுள் வாட்ச் ஸ்டிராப்களுடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
டிசைன் அடிப்படையில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய தகவல்களை கடந்து பிக்சல் வாட்ச் 2 மாடலின் அம்சங்களில் வெளியீட்டுக்கு முன் மாற்றங்கள் செய்யப்படலாம்.
- ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மேக் ப்ரோ அறிமுகம்.
- 2023 மேக் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது M சீரிஸ் பிராசஸர்களுடன் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) தனது சக்திவாய்ந்த மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. புதிய மேக் ப்ரோ மாடலில் M2 அல்ட்ரா சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. M2 அல்ட்ரா பிராசஸர் கொண்ட ஆப்பிள் மேக் ப்ரோ மாடல்களின் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி 2023 மேக் ப்ரோ மாடல் வீடியோ எடிட், 3டி ரென்டரிங் மற்றும் அறிவியல் கணினியியல் என்று தொழில்ரீதியாக அதிக திறன் கொண்ட சாதனங்களை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் M2 அல்ட்ரா பிராசஸர் கொண்டிருக்கிறது. இது ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.

M2 அல்ட்ரா பிராசஸரில் 24 சி.பி.யு. கோர்கள், அதிகபட்சம் 76 ஜி.பி.யு. கோர்கள் மற்றும் 32-கோர் நியூரல் என்ஜின் உள்ளது. இதன் மூலம் இந்த பிராசஸர் புதிய மேக் ப்ரோ மாடலை சந்தையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கணினியாக மாற்றியுள்ளது. இது எந்த அளவுக்கு சக்தி கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில் பென்ச்மார்க் டெஸ்டிங் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன்படி கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில், M2 அல்ட்ரா சிப்செட் கொண்ட புதிய மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டில் 2 ஆயிரத்து 794 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 21 ஆயிரத்து 453 புள்ளிகளையும் பெற்று அசத்தி இருக்கிறது. இது முந்தைய தலைமுறை மேக் ப்ரோ மாடலை விட அதிவேகமானது ஆகும்.
முந்தைய தலைமுறை ஆப்பிள் மேக் ப்ரோ மாடல் சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 1,378 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 10 ஆயிரத்து 390 புள்ளிகளையும் பெற்றது. அதன்படி புதிய 2023 மேக் ப்ரோ அதன் முந்தைய வெர்ஷனை விட சிங்கில் கோர் டெஸ்டிங்கில் 20 சதவதீம், மல்டி கோர் டெஸ்டிங்கில் 25 சதவீதம் அதிக திறன் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய M2 அல்ட்ரா சிப்செட்டில் இரண்டு M2 மேக்ஸ் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக அல்ட்ரா-ஃபியுஷன் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய 2023 மேக் ப்ரோ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.
- ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடல் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கலாம்.
- ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம்.
ஐகூ நிறுவனம் தனது புதிய ஐகூ நியோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 4-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முதல் டீசரில் போனின் பின்புறம் லெதர் போன்ற ஃபினிஷ் கொண்டிருக்கும் என்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷனின் ரிபிரான்டு செய்யப்பட்ட வேரியண்ட் ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. ஐகூ நியோ 7 ரேசிங் எடிஷன் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஐகூ நியோ 7 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ சாம்சங் E5 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும். ஐகூ நியோ 7 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்படுகிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது. இது பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
- அடுத்த சில வாரங்களில் இடையூறு படிப்படியாக குறையும்.
- இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.
டுவிட்டர் வலைதளத்தில், பயனர்கள் பின்தொடராதவர்களுக்கு (non-followers) மெசேஜ் அனுப்புவதற்கான வசதி விரைவில் நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் ஸ்பேம் மற்றும் ஏஐ பாட்களால் குறுந்தகவல் சேவையில் அதிக இடையூறு ஏற்படுவதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதோடு தனக்கு வந்த குறுந்தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்து இருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், அடுத்த சில வாரங்களில் குறுந்தகவல் மூலம் ஏற்படும் இடையூறு படிப்படியாக குறையும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் டுவிட்டர் தளத்தில், பயனர்கள் பின்தொடராத நபர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பின், பின்தொடராதவர்களுக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.
மேலும் டுவிட்டர் தளத்தில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாள் ஒன்றைக்கு பயனர்கள் 500 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும்.
- இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது.
- இதில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா உள்ளது.
இன்பின்க்ஸ் நிறுவனத்தின் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் FHD+ 120Hz எல்சிடி ஸ்கிரீன்
NEG கிலாஸ் பாதுகாப்பு
மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 13
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் சென்சார்
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி ஸ்மார்ட்போன் மேஜிக் பிளாக், இன்டர்ஸ்டெல்லார் புளூ மற்றும் சன்செட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 22-ம் தேதி துவங்குகிறது.
- சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் அம்பலமாகி இருக்கிறது.
- இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் அன்பேக்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் கேலக்ஸி Z ஃபோல்டு 5, கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் முதற்கட்டமாக தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM_731B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 பிஐஎஸ் விவரங்களில் மாடல் நம்பர் தவிர வேறு எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. எனினும், இதன் மூலம் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் மின்சாதனங்கள் பிஐஎஸ் சான்று பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் 6.7 இன்ச் உள்புற ஸ்கிரீன், மத்தியில் பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், வெளிப்புற பேனலில் 3.4 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் அட்ரினோ GPU வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன்யுஐ 5.1, 12MP டூயல் கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: OnLeaks x Mediapeanut






