search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 69 ஆயிரம் பட்ஜெட்டில் அசுஸ் கையடக்க கேமிங் கன்சோல் அறிமுகம் - விற்பனை எப்போ தெரியுமா?
    X

    ரூ. 69 ஆயிரம் பட்ஜெட்டில் அசுஸ் கையடக்க கேமிங் கன்சோல் அறிமுகம் - விற்பனை எப்போ தெரியுமா?

    • அசுஸ் நிறுவனத்தின் கையடக்க கேமிங் கன்சோலுக்கு அறிமுக சலுகை அறிவிப்பு.
    • புதிய அசுஸ் கேமிங் கன்சோல் வின்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.

    அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும். அறிமுகம் மட்டுமின்றி புதிய அசுஸ் ரோக் Ally மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோலில் 7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 120Hz ரிப்ரெஷ் ரேட், AMD ரேடியான் Navi3 கிராஃபிக்ஸ், 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்டோஸ் 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கன்சோல் ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் உள்ளிட்ட தளங்களின் கேம்களை சப்போர்ட் செய்கிறது. இத்துடன் எக்ஸ் பாக்ஸ் கேம் பாஸ் தளத்திற்கான மூன்று மாதங்கள் சந்தா வழங்கப்படுகிறது.

    அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:

    7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்

    120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU

    16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்

    512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்

    விண்டோஸ் 11 ஒஎஸ்

    ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்

    டூயல் ஸ்பீக்கர்

    அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்

    3.5mm ஹெட்போன் ஜாக்

    யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்

    ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்

    40 வாட் ஹவர் பேட்டரி

    65 வாட் சார்ஜிங் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூலை 12-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது. ஜூலை 7-ம் தேதி இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற உள்ளது.

    அறிமுக சலுகையாக அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இ-ஷாப் அல்லது அசுஸ் ஸ்டோர்களில் ஜூலை 12-ம் தேதி வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அசுஸ் ரோக் Ally கேஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×