என் மலர்
தொழில்நுட்பம்
- ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் புதிய அம்சங்கள் வழங்குவதற்கான அப்டேட் வெளியிடப்படுகிறது.
- ஆட்டோ நைட் மோட் வசதி வேஃபைன்டர் வாட்ச் ஃபேசில் மட்டுமே இயங்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அணியக்கூடிய சாதனம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா. ஐபோன்களுடன் பயன்படுத்த சீரான அனுபவம் வழங்குவதோடு, பயனர்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்து ஏராளமான வசதிகளை ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல் அனுப்புவது என ஏராளமான அம்சங்களை மணிக்கட்டில் உள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா கொண்டு நேரடியாக இயக்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் உடல்நலம் டிராக் செய்யும் வசதிகளான ஹார்ட் ரேட் டிராக்கிங், ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் இசிஜி போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.

மெல்லிய டிசைன், அசத்தலான இன்டர்ஃபேஸ் மற்றும் ஏராளமான அம்சங்கள் மூலம் ஆப்பிள் வாட்ச் மாடல் அனைவருக்கும் அத்தியாவசியமான சாதனமாகி விட்டது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கு மேலும் அதிக அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் ஆட்டோ நைட் மோட் அம்சம் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவில் உள்ள ஆம்பியன்ட் லைட் சென்சார் மூலம், ஆட்டோ நைட் மோட் தானாக செயல்படுத்தப்படுகிறது. இந்த மோடில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் புளூ லைட் நீக்கப்பட்டு ரெட் மற்றும் பிளாக் நிறங்கள் அடங்கிய இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இது இரவு நேரத்தில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.

நைட் மோட் வசதி வேஃபைன்டர் வாட்ச் ஃபேசில் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும். வாட்ச்ஒஎஸ் 10 மூலம் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் ஆட்டோ நைட் மோட் செட்டிங் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுதவிர புதிய விட்ஜெட்களும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை டிஜிட்டல் கிரவுன் மூலம் இயக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த விட்ஜெட்கள், பயனர் பயன்பாட்டுக்கு ஏற்ப ஸ்மார்ட் ஸ்டாக் வடிவில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
- நத்திங் போன் (2) மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது.
நத்திங் நிறுவனம் தனது போன் (2) மாடலின் வெளியீடு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நத்திங் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நத்திங் போன் (1) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டு தேதி அடங்கிய டீசரில், "Come to the bright side" வாசகமும், எல்இடி லைட்கள், ஆக்டோபஸ் படமும் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் போக்கிமானில் உள்ள அல்காசம் என்ற குறியீட்டு பெயர் இடம்பெற்றுள்ளது.
நத்திங் போன் (2) மாடலில் வளைந்த டிசைன், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து விட்டது. முந்தைய நத்திங் போன் (1) மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நத்திங் போன் (2) மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை சந்தையில் அறிமுகமாகி இருக்கும் மாடல்களை விட சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மாடலாக இருக்கும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்திக்கான கார்பன் வெளியீடு அதன் முந்தைய மாடலை விட 8.6 சதவீதம் குறைவு ஆகும்.
சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் போன் (2) மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய நேரப்படி ஜூலை 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிமுக நிகழ்வு துவங்க இருக்கிறது. முந்தைய வழக்கப்படி நத்திங் போன் (2) மாடலின் விற்பனை அறிமுக நிகழ்வை தொடர்ந்து ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.
Photo Courtesy: Onleaks | Smartprix
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரெட்மி இயர்பட்சை அறிமுகம் செய்தது.
- புதிய இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது பேட் 6 டேப்லெட் உடன் புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12 மில்லிமீட்டர் டிரைவர்கள், கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட், ப்ளூடூத் 5.3 மற்றும் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டச் கன்ட்ரோல்கள் மற்றும் லோ லேடன்சி ஆப்ஷன் உள்ளது.
புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 90 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும்.

ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் அம்சங்கள்:
ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, SBC கோடெக், கூகுள் ஃபாஸ்ட் பேர்
12 மில்லிமீட்டர் டிரைவர்கள்
என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
லோ லேடன்சி கேமிங் மோட்
டச் கன்ட்ரோல்கள்
IPX4 ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
ஹெட்செட்டில் 34 எம்ஏஹெச் பேட்டரி
சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் ஏர் வைட் மற்றும் பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1399 ஆகும். அறிமுக சலுகையாக ஜூன் 20-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை இந்த இயர்பட்ஸ் ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை அமேசான், சியோமி வலைதளங்கள் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- சியோமி பேட் 6 மாடலில் 13MP பிரைமரி கேமரா உள்ளது.
- ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் பேட் 6 மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் உள்ளது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்றே இந்திய சந்தையில் தனது புதிய பேட் 6 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய சியோமி பேட் 6 மாடலில் 11 இன்ச் 2.8K LCD ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட், HDR10, டால்பி விஷன் மற்றும் யுனிபாடி மெட்டல் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் பேட் 6 மாடலில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 8840 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி பேட் 6 மாடலில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, வைபை 6, ப்ளூடூத் 5.2 வழங்கப்பட்டு இருக்கிறது.சியோமி பேட் 6 மாடலில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா
https://www.maalaimalar.com/preview/story-173084

சியோமி பேட் 6 அம்சங்கள்:
11 இன்ச் 2880x1800 பிக்சல் 16:10 டிஸ்ப்ளே, 30/48/50/60/90/120/144Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
அட்ரினோ 650 GPU
6 ஜிபி/8 ஜிபி ரேம்
128 ஜிபி / 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயுஐ 14
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
டால்பி அட்மோஸ், 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்ரோபோன்கள்
வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
8840 எம்ஏஹெச் பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சியோமி பேட் 6 டேப்லெட் மாடல் மிஸ்ட் புளூ மற்றும் கிராஃபைட் கிரே என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் Mi வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. விற்பனை ஜூன் 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி பேட் 6 கீபோர்டு விலை ரூ. 4 ஆயிரத்து 999, கவர் ரூ. 1499, சியோமி ஸ்மார்ட் பென் 2nd Gen விலை ரூ. 5 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக புதிய டேப்லெட் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
- ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சலுகை விவரங்கள்:
ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.
ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.
- கிஸ்மோர் நிறுவனம் கடந்த மாதம் கிஸ்ஃபிட் குளோ Z ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
- புதிய கிஸ்மோர் கர்வ் மாடலில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.
கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய மேட்-இன்-இந்தியா கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 1.39 இன்ச் அல்ட்ரா HD ஆல்வேஸ் ஆன் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.
பிரீமியம் மெட்டல் பாடி கொண்டிருக்கும் கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் 360x360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் வாட்ச்-ஐ தெளிவாக பயன்படுத்த செய்கிறது. இதில் ஏராளமான கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமீபத்திய செயலிகள், செட்டிங்ஸ் மற்றும் அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.

கிஸ்மோர் கர்வ் அம்சங்கள்:
1.39 இன்ச், மெல்லிய மற்றும் வளைந்த டிசைன்
500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்ப்லிட் ஸ்கிரீன்
ப்ளூடூத் காலிங் 5.0
இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்
ஏ.ஐ. வாய்ஸ் அசிஸ்ட், ஏாளமான வாட்ச் ஃபேஸ்கள்
அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஹெல்த் சூட்: SpO2, ஹார்ட் ரேட், பிரீதிங், ஸ்டிரெஸ், மென்ஸ்டுரல்
ஸ்மார்ட் அம்சங்கள்: பிரைவசி லாக், பில்ட்-இன் கேம்ஸ், கால்குலேட்டர்
IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட்
JUOU ப்ரோ ஆப் சப்போர்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
கிஸ்மோர் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் ப்ளிப்கார்ட் மற்றும் கிஸ்மோர் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மை விலை ரூ. 1699 ஆகும். இந்த ஸ்மா்ட்வாட்ச்- பிளாக், கிரே, ஆலிவ் கிரீன் மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.
- M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் M2 சிப்செட் கொண்ட புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் புதிய மேக்புக் ஏர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஐமேக் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களும் M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடல்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. புதிய ஐமேக் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன் டிசைன் 2020 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யபபட்ட ஐமேக் மாடலில் M1 சிப்செட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் ஆப்பிள் நிறுவனம் M2 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மேக்புக் மாடல் இந்திய சந்தையிலும் கிடைக்கிறது.
- விவோ நிறுவனத்தின் Y சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்றன.
- விவோ ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ நிறுவனம் சமீபத்தில் தான் ஏராளமான Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இவற்றில் விவோ Y35 தவிர வேறு எந்த ஸ்மார்ட்போனும் இதுவரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 90Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ரூ. 20 ஆயிரம் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் விவோ Y35 மாடல் விலை தற்போது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய விவோ Y35 ஸ்மார்ட்போனினை ரூ. 1500 வரை குறைந்த விலையில் வாங்கிட முடியும்.

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் விவோ Y35 மாடலின் விலை ரூ. 18 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விவோ ஆன்லைன் ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டு இருக்கிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 16 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
இத்துடன் ஐசிஐசிஐ அல்லது ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
விவோ Y35 அம்சங்கள்:
அம்சங்களை பொருத்தவரை விவோ Y35 மாடலில் 6.58 இன்ச் LCD டிஸ்ப்ளே, 1080x2408 பிக்சல் ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு ரேம் திறனை அதிகபட்சம் 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மெமரியை பொருத்தவரை 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது
- சாம்சங் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை.
- புதிய கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபேன் எடிஷன் (FE) சீரிஸ் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதைத் தொடர்ந்து கேலக்ஸி S23 FE மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கின. அதன்பிறகு லீக் ஆன ஏராளமான தகவல்களை கொண்டு இந்த மாடல் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்பட்டு வருகிறது.
முன்னதாக கேலக்ஸி S21 FE மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கேலக்ஸி S22 FE மாடல் அறிமுகம் செய்யப்படவே இல்லை. தற்போது கேலக்ஸி S23 FE மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் கொரியாவில் இருந்து வெளியாகி உள்ளன.
அதன்படி கேலக்ஸி S23 FE மாடலின் பேட்டரி விவரங்கள் சேஃப்டிகொரியா சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர கேலக்ஸிகிளப் வலைதள விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி EB-BS711ABY எனும் மாடல் நம்பர் கொண்டிரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் SM-S711 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 50MP+ 12MP+ 12MP கேமரா சென்சார்கள், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- சியோமி பேட் 5 மாடல் இரண்டு வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- விலை குறைப்பு மட்டுமின்றி வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேட் 6 ஆன்ட்ராய்டு டேப்லெட் மாடலை நாளை (ஜூன் 13) அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டேப்லெட் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி பேட் 5 மாடலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் சியோமி பேட் 5 மாடல் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 26 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் சியோமி பேட் 5 மாடலின் 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 1000, 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ. 500 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் புதிய சியோமி பேட் 5 மாடலை முறையே ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும். சியோமி பேட் 5 மாடல் காஸ்மிக் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி இந்த மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி பேட் 5 அம்சங்கள்:
புதிய சியோமி பேட் 5 மாடலில் 11 இன்ச் 2.5K /WQXA LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், HDR10, குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவாட் ஸ்பீக்கர் செட்டப், டால்பி அட்மோஸ், 6.85mm மெல்லிய பாடி, சியோமி ஸ்மார்ட் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் பென் கொண்டு குறிப்பு எடுப்பது, எழுதுவது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, பென் மற்றும் இரேசர் இடையே ஸ்விட்ச் செய்வது என ஏராளமான ஆப்ஷன்களை இயக்க முடியும். சியோமி பேட் 5 மாடலில் 8720mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.
ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.
- இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.

மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?
ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.
வெரிஃபைடு பெற தேவையானவை:
இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.
பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.






