search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸ் - இணையத்தில் லீக் ஆன விலை விவரங்கள்!
    X

    கோப்புப் படம் 

    சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸ் - இணையத்தில் லீக் ஆன விலை விவரங்கள்!

    • சாம்சங் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெற இருக்கிறது.
    • கேலக்ஸி வாட்ச் 6 சீரிசில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் ரென்டர்கள் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புதிய கேலக்ஸி வாட்ச் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய விலை விவரங்கள் ஃபிரான்சில் இருந்து வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இவை ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபட அதிக வாய்ப்புகள் உண்டு.

    லீக் ஆன விலை விவரங்கள்:

    கேலக்ஸி வாட்ச் 6 40mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் கிரீம் 319.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 774

    கேலக்ஸி வாட்ச் 6 40mm 4ஜி கிராஃபைட் மற்றும் கிரீம் 369.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 33 ஆயிரத்து 236

    கேலக்ஸி வாட்ச் 6 44mm ப்ளூடூத் கிராஃபைட் மற்றும் சில்வர் 349.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 31 ஆயிரத்து 439

    கேலக்ஸி வாட்ச் 6 44mm 4ஜி கிராஃபைட் மற்றும் சில்வர் 399.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 931

    கோப்புப் படம்

    கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 419.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 727

    கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 43mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 469.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 42ஆயிரத்து 219

    கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm ப்ளூடூத் பிளாக் மற்றும் சில்வர் 449.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 40 ஆயிரத்து 422

    கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக் 47mm 4ஜி பிளாக் மற்றும் சில்வர் 499.99 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 44 ஆயிரத்து 914

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி வாட்ச் 6 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாத கடைசி வாரத்தில் அன்பேக்டு நிகழ்வு முதல் முறையாக கொரியாவில் நடைபெறுகிறது. இதே நிகழ்வில் கேலக்ஸி Z ஃப்ளிப் 5, கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி டேப் S9 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×