search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகுண்ட ஏகாதசி விழா"

    • பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று வேங்கட கிருஷ்னன் திருக்கோலத்தில் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர், வேணுகோபாலன், காளிங்க நர்த்தனர், சக்கரவர்த்தி திருமகன், ஏணிக் கண்ணன், பரமபத நாதன், பகாசு ரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளி கண்ணன், நாச்சியார் ஆகிய திருக்கோலங்களில் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கிறார். பகல் பத்து விழாவில் 6-ம் நாள் மாலை முதல் 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    வைகுண்ட ஏகாதசியான வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி 23-ந்தேதி அதி காலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரி சனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப் பத்து உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    • பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.
    • ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள்.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவ தும் பல்வேறு திரு விழாக்கள் வெகு விமரிசையாக நடை பெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வை குண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து,இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (12-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங் கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

    இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (22-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    23-ந்தேதி ராப்பத்து உற்ச வத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத் தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    29-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

    • வீர அழகர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
    • முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்று கிழக்குப்பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற வீர அழகர்கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் திரண்டனர்.

    மேள தாளத்துடன் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளை பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என வரவேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதேபோல் அப்பன் பெருமாள் கோவில், தியாக விநோத பெருமாள், உடைகுளம் மான்பூண்டி நல்லாண்டவர் பெருமாள் கோவில், வேம்பத்தூர் பூமி நீளாபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆதி கேசவ பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
    • ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக இங்கு ஆதிகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆதி கேசவ பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக இங்கு ஆதிகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆதிக்கேசவப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றது. பால், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், அரிசி மாவு , நெல்லி பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து யாகம் வளர்த்து புனித கலசங்க ளுக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர வைக்கப்பட்டு கோவிலை வலம் வந்து வடக்கு கோபுர வழியாக வெளியே அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டு துளசி மற்றும் மலர்களை தூவி வழிபட்டனர்.

    அங்கிருந்து திருச்செங்கோடு நகரத்தை சுவாமி காணும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க வேத பாராயணத்துடன் ராஜ கோபுரத்தின் பிரம்மாண்ட கதவுகளுக்கு புனித கலச நீர் தெளிக்கப்பட்டு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பரமபத வாசல் வழியாக கோவிலுக்குள் எழுந்தருளினார்.

    உற்சவரை பின்தொ டர்ந்து ஏராளமான பக்தர்கள் பரமபத வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வடக்கு ராஜ கோபுர பாதையே இங்கு சொர்க்கவாசல் ஆக போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம். வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால், குமாரபாளையம் விட்டலபுரி பாண்டு ரங்கர் கோவிலில் சொர்க்கவாசல் விழா நடைபெறுவதை யொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணி யில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில் வளாகம்

    முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டுள்ளது. அக்ர ஹாரம் லட்சுமிநாரா யண சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்க ளிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    • வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நடந்தது
    • பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வைகுண்ட ஏகாதசியை சொர்க்கவாசல் சேவை நடைபெறுவது வழக்கம். இது தொடர்பாக நேற்று ஆர்டிஓ தலைமையில் பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிகள் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான உத்திர ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஜனவரி 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் ஆர்டிஓ பூங்கொடி தலைமையில் தாசில்தார் ரமேஷ் திருக்கோயில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வருவாய் துறை, பேரூராட்சி துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று இருந்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 30 முதல் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் மூலம் பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் போது அதிக அளவில் பஜனை குழுக்கள் திருக்கோவிலுக்கு வருகை செய்வதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையை உபயோகப்படுத்துவதாலும் அன்று ஒரு நாள் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் இக்கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வருகை புரியாமல் புறக்கணித்ததால் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    இக்கூட்டத்தில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஆர் ஐ ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் சுகாதார், மேற்பார்வையாளர் ரமேஷ், திருக்கோயில் கணக்காளர் பாபு மற்றும் மணியம் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

    ×