என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடக்கு ராஜகோபுரம் வழியாக பெருமாள் எழுந்தருளிய காட்சி.
திருச்செங்கோடு ஆதிகேசவபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
- திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆதி கேசவ பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
- ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக இங்கு ஆதிகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆதி கேசவ பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக இங்கு ஆதிகேசவப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆதிக்கேசவப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றது. பால், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், அரிசி மாவு , நெல்லி பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து யாகம் வளர்த்து புனித கலசங்க ளுக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் அமர வைக்கப்பட்டு கோவிலை வலம் வந்து வடக்கு கோபுர வழியாக வெளியே அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டு துளசி மற்றும் மலர்களை தூவி வழிபட்டனர்.
அங்கிருந்து திருச்செங்கோடு நகரத்தை சுவாமி காணும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியம் முழங்க வேத பாராயணத்துடன் ராஜ கோபுரத்தின் பிரம்மாண்ட கதவுகளுக்கு புனித கலச நீர் தெளிக்கப்பட்டு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பரமபத வாசல் வழியாக கோவிலுக்குள் எழுந்தருளினார்.
உற்சவரை பின்தொ டர்ந்து ஏராளமான பக்தர்கள் பரமபத வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று சுவாமியை வழிபட்டனர். திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது. வடக்கு ராஜ கோபுர பாதையே இங்கு சொர்க்கவாசல் ஆக போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






