search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி விழா"

    • உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    தூத்துக்குடி:

    மீனவர்களின் உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலக மீனவர் தினத்தை 1998-ம் ஆண்டு ஐ.நா. சபை அங்கீகரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் தூத்துக்குடி ஸ்நோ ஹாலில் மீனவர் தின விழா நடபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து அவர் அங்கிருந்து மீனவர் தின விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி மீனவ சமுதாய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், மீனவ சமுதாய தலைவர்களின் சேவைகளையும் பாராட்டி விருது வழங்கினார்.

    தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இதனை முடித்து கொண்டு பிற்பகல் பீச் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் விசைப்படகு மீனவர்களுடன் கலந்துரையாடினார். இன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார். 

    • 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி
    • இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடத் தப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டை யொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி யது.

    முதல் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பேரின்ப பெருவிழாவாக நடைபெற்றது. இதில் தேவ ஊழியர் கள் அனிசன், சாமுவேல், எலியாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி (பெங்களூரு) ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளித்தனர்.ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால் தினகரன் செய்தி அளித்தார்.

    நேற்று மாலையில் மூன்றாம் நாள் விழா நடந்தது. இதனையொட்டி அரு மனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகு ழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இயேசு நாத ரின் உருவம் தாங்கிய ரதம், வண்ண உடைகளுடன் கண்ணை கவரும் வகை யில் கலைஞர்கள் வலம் வந்தனர். பேண்ட் வாத்தியம் உட்பட இசை கருவிகள் இசைக்கப்பட்டன.அதனை தனி மேடையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், விஜய்வசந்த் எம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியதுணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்களூரு ராபர்ட் கிறிஸ்டோபர், ஐ.ஜே.கே. கட்சி மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிஸ், பொருளாளர் கிளாரிஸ் பிரபு, செய்தி தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திலிப் சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் அல்காலித், குமரி மேற்கு மாவட்ட செயலாளர்ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

    நாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மதத்தில் 3 வகை உண்டு. இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை. கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களால் எந்த மோதலும், வன்முறையும் நடப்பது இல்லை.

    ஆனால் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். சாதாரண இந்து மக்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. மடாதிபதிகளுக்கும் பொறுப்பு இல்லை. பாரதிய ஜனதா போன்றவை தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை புகுத்துகிறார்கள்.

    சாதாரண இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவில்லை. சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆதலால் எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கி றார்கள். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரிவார அமைப்புகளை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது சகோதரத்தை, சமத்து வத்தை, சமூக நீதியை பேசினால் வரவேற்கலாம். ஆனால் இதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. சங் பரிவார அமைப்புகளை பற்றி பேசும்போது இந்து களை விமர்சிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. தற்போது நடந்த மாநாட்டில் அனைத்து மதத்தினரையும் மேடையில் ஏற்றி இருக்கிறோம்.அனை வருக்கும் நேர்மறை சிந்தனை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் நேர்மறை சிந்தனை வரும். ஏசு 3 ஆண்டு போதித்த போதனைகள் தான் உலகை ஆழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கி னால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு வழங்கினால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாரதிய ஜனதாவினர் விளம்பரத்துக்காக அதுபற்றி பேசி வருகிறார்கள். பா.ஜனதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதாவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது" என்றார்.

    • புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி- தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும்

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டையொட்டி வெள்ளிவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி, 23-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பேரின்ப பெரு விழாவாக நடைபெறு கிறது.

    இதில் தேவ ஊழியர்கள் அனிசன், சாமுவேல், எலி யாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி(பெங்களூரு)ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளிக்கி றார்கள். மேலும், ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்துகிறார்கள். அதனைதொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால்தி னகரன் செய்தி அளிக்கிறார்.

    23-ந்தேதி மாலை சரியாக 5.30 மணிக்கு அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் 1000 கலைஞர்கள் நடத்தும் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி. தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லகுமார், தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்.

    ம.தி.மு.க அமைப்பு செயலா ளர் துரை வைகோ. எஸ். டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்க ளூரு ராபாட் கிறிஸ்டோபர், எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலைவர் மற்றும் ஐ.ஜே.கே கட்சியினுடைய மாநில தலைவர் ரவி பச்சைமுத்து திரைப்பட இயக்குனர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த். இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை முன்னாள் மற்றும் இன்னாள் பேராயர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி சிறப்புரையாற்றுகிறார். தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தொடர்ந்து பாடகர் கானா பாலா, ரேஷ்மா ராகவேந்திரன் ஆகியோரின் பின்னணி பாடல்களுடன் அமைந்த பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இத்தகவலை அருமனை கிறிஸ்தவ இயக்கசெயலாளர் அருமனை ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
    • கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் வெள்ளி விழா மலரையும் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சரும் இணை வேந்தருமான அமைச்சர் ரகுபதி, பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இதையடுத்து, நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர்.

    கிரீன்வேஸ் சாலையில் தாம் குடியேற இருந்த இல்லத்தை சட்டப் பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    சீர்மிகு சட்டப்பள்ளியில் பயில்வோரில் 70 சதவீதம் பேர் மாணவிகள். 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 4,500க்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.

    சட்ட விதி மட்டுமின்றி அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளையும், சமூக நீதியையும் காபாற்றும் வகையில் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் வழக்கறிஞர்களாக சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காக தங்கள் வாதத் திறமையை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும்.

    சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா பி.கே.தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது.
    • கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    கோவை 

    கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா பி.கே.தாஸ் நினைவு கலை அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு நேரு கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அறங்காவலர் வக்கீல் முனைவர் பி.கிருஷ்ணதாஸ் தலைமைப் பொறுப்பாளராக தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் நேரு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.அனிருதன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக இந்தியாவிற்கான கோஸ்டாரிகா தூதர் கிளாடியோ அன்சோரெனா கலந்து கொண்டார். நேரு கல்விக் குழுமத்தின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் பி. கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நேரு கலை அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழாவின் சிறப்பாக மதிப்புமிக்க விருதாளர்கள் என்ற தலைப்பில் நலம் விரும்பிகள் வகை, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்களில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்கள், குறிப்பிட்ட முதலாளிகளுக்கும், ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயின்று சாதனை புரிந்த மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முடிவில் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றின் இயக்குனர் செல்வி ஷானி நன்றி கூறினார்.

    ×