search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளி விழா கொண்டாட்டம் - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
    X

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் வெள்ளி விழா கொண்டாட்டம் - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு

    • 52 கலைகுழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி
    • இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை

    நாகர்கோவில் :

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடத் தப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழாவின் 25-ம் ஆண்டை யொட்டி வெள்ளிவிழா கொண்டாட்டம் கடந்த புதன்கிழமை தொடங்கி யது.

    முதல் இரண்டு நாட்கள் கிறிஸ்துமஸ் பேரின்ப பெருவிழாவாக நடைபெற்றது. இதில் தேவ ஊழியர் கள் அனிசன், சாமுவேல், எலியாஸ் ஜேக்கப் (துபாய்) ரவி மணி (பெங்களூரு) ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தி அளித்தனர்.ஜெர்சன் எடின்புரோ மற்றும் ஆல்பன் தாமஸ் ஆகியோர் பாடல் ஆராதனை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு செய்தியாளர் பால் தினகரன் செய்தி அளித்தார்.

    நேற்று மாலையில் மூன்றாம் நாள் விழா நடந்தது. இதனையொட்டி அரு மனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 52 கலைகு ழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இயேசு நாத ரின் உருவம் தாங்கிய ரதம், வண்ண உடைகளுடன் கண்ணை கவரும் வகை யில் கலைஞர்கள் வலம் வந்தனர். பேண்ட் வாத்தியம் உட்பட இசை கருவிகள் இசைக்கப்பட்டன.அதனை தனி மேடையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், விஜய்வசந்த் எம்பி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியதுணைதலைவர் தெஹ்லான் பாஹவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் பெங்களூரு ராபர்ட் கிறிஸ்டோபர், ஐ.ஜே.கே. கட்சி மாநில தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் டென்னிஸ், பொருளாளர் கிளாரிஸ் பிரபு, செய்தி தொடர்பாளர் பாவலன், வழக்கறிஞர் அணி துணை செயலாளர் திலிப் சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் அல்காலித், குமரி மேற்கு மாவட்ட செயலாளர்ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-

    நாம் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. மதத்தில் 3 வகை உண்டு. இந்து மதம் வெறுப்பை உமிழ்வது இல்லை. என் மதம் உயர்ந்தது உன் மதம் தாழ்ந்தது பற்றி பேசுவது இல்லை. கடவுளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களால் எந்த மோதலும், வன்முறையும் நடப்பது இல்லை.

    ஆனால் இந்து மதத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெறுப்பை உமிழ்கிறார்கள். சாதாரண இந்து மக்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை. மடாதிபதிகளுக்கும் பொறுப்பு இல்லை. பாரதிய ஜனதா போன்றவை தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மதங்களுக்கு இடையே வெறுப்பை புகுத்துகிறார்கள்.

    சாதாரண இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தவில்லை. சமூகத்தில் இந்துக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆதலால் எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கி றார்கள். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் சங் பரிவார அமைப்புகளை தான் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது சகோதரத்தை, சமத்து வத்தை, சமூக நீதியை பேசினால் வரவேற்கலாம். ஆனால் இதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையே தூக்கி எறிய ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. சங் பரிவார அமைப்புகளை பற்றி பேசும்போது இந்து களை விமர்சிப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. தற்போது நடந்த மாநாட்டில் அனைத்து மதத்தினரையும் மேடையில் ஏற்றி இருக்கிறோம்.அனை வருக்கும் நேர்மறை சிந்தனை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் நேர்மறை சிந்தனை வரும். ஏசு 3 ஆண்டு போதித்த போதனைகள் தான் உலகை ஆழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கி னால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பு வழங்கினால் நன்றாக இருக்காது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அப்படி இருக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாரதிய ஜனதாவினர் விளம்பரத்துக்காக அதுபற்றி பேசி வருகிறார்கள். பா.ஜனதாவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைக்குமா? என்று கேட்கிறீர்கள். பாரதிய ஜனதாவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த காலத்திலும் கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு இல்லை. நல்லவர்களால் பாராட்டக்கூடிய நல்லாட்சி நடந்து வருகிறது" என்றார்.

    Next Story
    ×