search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டாட்சியர்"

    • சங்கன் விடுதியில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்
    • புகார் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கன் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆனால், இதுவரையிலும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர். 

    • பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விருதுநகர் கலெக்டர் புத்தகம் வழங்கினார்.
    • வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் மற்றும் மற்றும் பிற்படுத்தப் பட்டோர் நல விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கலெக்டர் ஜெயசீலன் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். புத்தகம் ஒரு மனிதனை மேன்மையாக்குகிறது. புத்தகம் படிப்பதன் மூலம் அறிவு மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் சிங்கராஜ், முதல்வர் வெங்கடேசுவரன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டி அருகே மனுநீதி முகாம் நடந்தது.
    • துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி தாலுகா தொட்டப்பநாயக்கனூரில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    உசிலம்பட்டி வட்டாட்சியர் கருப்பையா, துணை வட்டாட்சியர் லோகேஸ்வரி, சமூக நல பாதுகாப்பு வட்டாட்சியர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜா, யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், ரம்யா, நர்மதா, துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    ×