என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் தடம்புரண்டு விபத்து"

    • ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம் புரண்டது.
    • இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புவனேஷ்வர்:

    சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் இன்று காலை 8.51 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 2 பொது பெட்டி என மொத்தம் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.

    ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

    திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
    • ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.

    இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.

    உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரெயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைக்கும் அதிவேக ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கியோ மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு.
    • ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்நிலையில், தாம்பரம் யார்டில் காலி சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டது குறித்து தென்னக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

    மேலும் கூறுகையில், " என்எம்சி ரேக்கின் 3 காலி சரக்கு ரெயில் பெட்டிகள் (8,9,10வது வேகன்கள்) தாம்பரம் யார்டுக்கு மாற்றப்படும்போது தடம் புரண்டன.

    யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில்களின் சேவையும் பாதிக்கவில்லை.

    சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என கூறப்பட்டுள்ளது.

    • ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    சென்னை தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.

    அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

    மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

    ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்.
    • மூன்றில் இரண்டு பயணிகள் பெட்டிகள் ஆகும். பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சாலிமார் செல்லும் செகந்திராபாத்- சாலிமார் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒன்று பார்சல் பெட்டியாகும். இரண்டு பயணிகள் பெட்டியாகும்.

    22850 எண் கொண்ட இந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரெயில் தெரிவித்துள்ளது.

    ×