என் மலர்
இந்தியா

மேற்கு வங்கத்தில் செகந்திராபாத்- சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
- தெலுங்கானா மாநிலத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்.
- மூன்றில் இரண்டு பயணிகள் பெட்டிகள் ஆகும். பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா சாலிமார் செல்லும் செகந்திராபாத்- சாலிமார் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒன்று பார்சல் பெட்டியாகும். இரண்டு பயணிகள் பெட்டியாகும்.
22850 எண் கொண்ட இந்த ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தென்கிழக்கு ரெயில் தெரிவித்துள்ளது.
Next Story






