search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்"

    • திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அப்போதே திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்து திருக்கோவிலூருக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    ஏற்கனவே, விளவங்கோடு தொகுதிக்கும் விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாங்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் ஒரு பேட்டியில் மோடியின் பலத்துக்கு நிகராக யாரும் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வாக்களித்தவர்கள் அனைவருக்கும் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். அதை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கார்த்தி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது காங்கிரசுக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவகங்கை தொகுதியில் இருந்து பலர் புகார் கடிதங்களை டெல்லி தலைமைக்கு அனுப்பினார்கள். இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.

    மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கார்த்தி சிதம்பரம், எம்.பி. மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருப்பதால் தமிழக காங்கிரசால் நடவடிக்கை எடுக்க இயலாது.

    எனவே அவர் மீது வந்த புகார்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    கார்த்தி சிதம்பரம் விரைவில் விளக்கம் அளித்து கடிதம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவரது விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை டெல்லி மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காங்கிரசுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
    • 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன.

    திருப்பூர் :

    தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுஓட்டுப்பதிவு எந்திரங்களை 6 மாதங்களுக்கு, சட்டசபை தொகுதி வாரியா, அனைத்து ஆவணங்களுடன் பாதுகாக்க வேண்டும். தேர்தல் தொடர்பான வழக்கு நடந்தால், முக்கிய ஆதார ஆவணமாக இவற்றை பயன்படுத்துவது வழக்கம்.

    தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஏப்., 6-ந் தேதியும், ஓட்டு எண்ணிக்கை, மே 2-ந் தேதியும் நடந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், ஆவணங்களுடன் பாதுகாக்கப்பட்டன. இடையே ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், அந்த காலகட்டத்தை நீக்கி 2022 மே 31 வரை, கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்பட 234 தொகுதிகளிலும் பயன்படுத்திய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்டன. அவற்றை மாவட்டம் வாரியாக இருப்பு வைக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பழுதான எந்திரங்களை தனியாக பிரித்து வைத்து, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் தேதியில்அவற்றை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×