search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு

    அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    அரியலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×