search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியாளர்கள்"

    • முன்னாள் மாணவர் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • தன் 2 மகன்களும் பொறியாளர்களாகவதற்கு முதல் காரணம் தூய அந்தோனியார் பள்ளி தான்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் 7-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் மாணவரும் தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவருமான அருள்தாஸ் தலைமை தாங்கி பேசும்போது, நான் 12-ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதற்கும், உயர்ந்த பதவி அடைந்ததற்கும் , தன் 2 மகன்களும் மென்பொருள் பொறியாளர்களாக ஆவதற்கும் முழு முதல் காரணம் தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியே என்றார்.

    பள்ளியின் தாளாளர் ஜெரோம் அடிகளார், தலைமையாசிரியர் அந்தோணி என்ற அல்போன்ஸ், தஞ்சை மறை மாவட்ட பேராலய பங்கு தந்தை பிரபாகர அடிகளார், தஞ்சாவூர் டி.எம்.எஸ்.எஸ் இயக்குனர் அருளானந்து அடிகளார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நாற்கா லிகள் வாங்குவதற்காக பள்ளியின் தாளாளர் ஜெரோம் அடிகளார், தலைமையாசிரியர் அல்போன்ஸ் அடிகளார் ஆகியோரிடம் ரூ.75000-க்கான காசோலை வழங்கப்பட்டது.

    இதில் தஞ்சை தலைமை அஞ்சலக துணை தலைவர் குழந்தைராஜ் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் நாசர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கிளமெண்ட் அந்தோணிராஜ், செயலர் முத்துக்குமார், முன்னாள் தலைவர் டாக்டர் முகமது அலி, உதவி தலைவர் முத்தமிழ் விரும்பி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×