search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை"

    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 
    பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.



    அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #Egyptpolice
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

    இந்நிலையில், எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    இதுதொடர்பாக, போலீசார்  கூறுகையில், எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் இன்று போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர். #Egyptpolice 
    ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரு என்கவுண்டர்களில் பாதுகாப்பு படையினர் 6 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட்னர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடவடிக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



    இதேபோல், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Encounter
    காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #HandwaraEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மூன்று உள்ளூர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Pulwama #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் உள்ளூர் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #JammuKashmir #Pulwama #Encounter
    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #MilitantstAttack #SecutiryForceEncounter
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ஹயுனா டிரால் என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

    இந்நிலையில், அதே பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 3 ஆனது. இத்துடன் அங்கு துப்பாக்கி சண்டை முடிவடைந்தது. விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Kashmir #Kashmirencounter #Pulwamaencounter #Terrorists killed
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புனித ரமலான் மாதத்தில் காஷ்மீரில் நிபந்தனையுடன் கூடிய சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Encounter
    ×