search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைஜர்"

    • 2013லிருந்து இந்தியாவில் எதேச்சதிகாரம் (autocracy) நிலவுகிறது என்கிறது இந்த ஆய்வு
    • உலகளவில் 42 நாடுகளில் எதேச்சதிகாரம் நிலவுகிறது என குறிப்பிட்டது இந்த ஆய்வறிக்கை

    179 நாடுகளில் ஜனநாயகம் எவ்வாறு உள்ளது என வி-டெம் (V-Dem) எனும் அமைப்பு ஆய்வு நடத்தி சுதந்திர ஜனநாயகத்தை (Liberal Democracy) கடைபிடிக்கப்படும் நாடுகளை பட்டியலிட்டது.

    இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் நைஜர் (Niger) மற்றும் ஐவரி கோஸ்ட் (Ivory Coast) ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 104-வது இடத்தில் இந்தியா உள்ளது.

    இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

    உலகளவில் 42 நாடுகளில் எதேச்சதிகாரம் நிலவுகிறது.

    2013லிருந்து இந்தியாவில் எதேச்சதிகாரம் (autocracy) நிலவுகிறது.

    எதேச்சதிகாரம் அதிகம் நிலவும், முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.

    சுமார் 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா எதேச்சதிகாரத்தில் சிக்கி உள்ளது.

    "முழு ஜனநாயகம்" (complete democracy) அல்லாமல் "தேர்தல் வழி எதேச்சதிகாரம்" (electoral autocracy) கடைபிடிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி விட்டது.


    காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவர் கொண்டு வந்த "அவசர நிலை" (emergency) காலகட்டத்தில் இருந்ததை போன்று தற்போதும் எதேச்சதிகாரம் மிகுந்த நாடாக இந்தியா உருவெடுத்து விட்டது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
    • அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    நைஜர்:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.

    இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500 பேரை பிரான்ஸ் நைஜரில் நிலை நிறுத்தி இருந்தது. பிரான்சுக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் முகமது பாசும் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் திரும்பியது. அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.

    இந்நிலையில் அந்த நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 1500 வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    • நைஜர் நாட்டில் இந்தியர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
    • நைஜரில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

    புதுடெல்லி:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே, உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நைஜரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நைஜர் நாட்டின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நைஜர் நாட்டில் இந்தியர்கள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிவித்தார்.

    • அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் நைஜர் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது
    • நைஜருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்கா திட்டவட்டம்

    மேற்கு ஆப்பிரிக்காவின் பெரிய நாடு நைஜர்.

    அந்நாட்டில் ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற ஒரு ராணுவ புரட்சி மூலம் அங்கு பதவியில் இருந்த அதிபர் மொஹமத் பாஸோம் மாற்றப்பட்டு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி ஆட்சியை கைப்பற்றி தன்னை புதிய அதிபராக அறிவித்து கொண்டார்.

    இந்த புதிய ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.

    இந்நிலையில் நைஜர் நாட்டின் தலைநகர் நியாமே நகரில், புதிய ஆட்சியின் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் சென்றனர்.

    ஆனால், இந்த பிரதிநிதிகளை தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியின் அதிபரும், ராணுவ அமைப்பின் தலைவருமான அப்துரஹ்மானே சியானி சந்திக்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற 3 ராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்றவரும், ராணுவ அமைப்பின் ஜெனரலுமான மூஸா ஸலாவ் பார்மோ (Gen. Moussa Salaou Barmou) ஆகியோர் மட்டுமே இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

    சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கத்தின் துணை செயலாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்திருப்பதாவது:-

    ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ராணுவ அமைப்பின் தலைவர்கள் எங்களை ஜனநாயகமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் நைஜர் அதிபரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் வீட்டு காவலில் இருப்பதாக நினைக்கிறோம். மீண்டும் மக்களாட்சிக்கு திரும்புவதற்கு அமெரிக்காவின் கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் இந்த கிளர்ச்சியாளர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

    நைஜர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக செயல்படும் அவர்களின் வழிமுறையில் அவர்கள் தெளிவாக தொடர இருக்கிறார்கள். எங்கள் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக இருந்தாலும் சில நேரங்களில் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் கடினமாக இருந்தது.

    ஜனநாயகம் மீண்டும் திரும்பவில்லை என்றால் நைஜர் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகள் நிறுத்தப்படும் என தெரிவித்தோம். முன்னாள் அதிபர் மொஹமத் பாஸோம், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த எங்கள் அச்சங்களை தெரிவித்தோம்.

    நாங்கள் புரிந்து கொண்ட வரையில் ரஷியாவின் ராணுவ மற்றும் கூலிப்படையாக செயல்படும் வாக்னர் அமைப்பின் உதவியை பெற்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என புதிய ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே அதை அவர்கள் கோரமாட்டார்கள்.

    இவ்வாறு விக்டோரியா தெரிவித்தார்.

    • நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
    • நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

    அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

    ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.

    இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.

    அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    • ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
    • தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளார்.

    நியாமி:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:-

    நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம். எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.

    ×