என் மலர்
நீங்கள் தேடியது "துரந்தர்"
- டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.
- துரந்தர் தி ரிவெஞ்ச் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "டாக்சிக்". கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப் படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. நீண்ட கால படப்பிடிப்பில் உள்ள போதிலும், டாக்சிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.
கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் நடிகர் யஷ் நடிக்கும் படம் என்பதால் "டாக்சிக்" படத்திற்கு துவக்கம் முதலே எதிரபார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் "துரந்தர் தி ரிவெஞ்ச்" மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
பான் இந்தியா அளவில் கே.ஜி.எஃப். 2 மற்றும் துரந்தர் திரைப்படங்கள் வசூலில் ரூ. 1000 கோடியை கடந்து வெற்றி பெற்றன. இந்த நிலையில், யஷ் நடித்துள்ள டாக்சிக் மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் ஒரே நாளில் வெளியாவது உறுதியாகி இருக்கிது.
எனினும், பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது போட்டியை வலுப்படுத்தும் என்பதோடு, எந்தப் படம் வெற்றி பெறும் என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை.
- சமீபத்தில் துரந்தர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது
- துரந்தர் பார்ட் 2 டீசர் இன்று வெளியாகிறது
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதும், இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. துரந்தர்: தி ரிவெஞ்ச் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
துரந்தர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துறந்தார் 'துரந்தர்'
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்று (ஜனவரி 30) முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் இப்போது ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.
- நதீம் அமிதாப் பச்சன், அஸ்ரானி, அடில் உசேன் மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்துள்ளார்.
- துரைத்துறையை தாண்டி நாடகத்துறையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் துரந்தர். இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நதீம் கான் என்ற நடிகர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னிடம் வீட்டு வேலை செய்த 41 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை மால்வனி காவல்துறையினர் ஜனவரி 22, அன்று நதீம் கானைக் கைது செய்தனர். அவர் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நதீம் கானிடம் 2015 முதல் வேலை செய்து வந்துள்ளார். நதீம் கான் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'.
- துரந்தர் படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆகிறது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும், இந்தியளவில் ரூ.1011.73 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.284.10 கோடியும் வசூலாகியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் ரூ.1100.23 கோடி வசூலை குவித்ததாக, படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை துரந்தர் படைத்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 30 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும், இந்தியளவில் ரூ.968 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.272 கோடியும் வசூலாகியுள்ளது.
- 'எமர்ஜென்சி' முதல் 'துரந்தர்' வரை சினிமாவை அரசியல் ஆயுதமாக மாற்றின
- அதில், சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனாலும், பல படங்கள் இணையத்தில் ட்ரோல் ஆகின.
2025 ஆம் ஆண்டு இந்திய சினிமாவுக்கு ஒரு அரசியல் அலை போல இருந்தது. பாலிவுட் முதல் பிராந்திய சினிமா வரை, பல படங்கள் 'Propaganda' என்ற பெயரில் சர்ச்சையை கிளப்பின.
இந்துத்துவா கதைகள், வரலாற்று சித்தரிப்புகள், மத வன்முறை காட்சிகள் என இவை அரசியல் கட்சிகளின் அஜெண்டாவை பிரதிபலித்தன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதில், சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனாலும், பல படங்கள் இணையத்தில் ட்ரோல் ஆகின. அவ்வகையில் இந்த ஆண்டின் டாப் சர்ச்சை பிராபகண்டா படங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' முதல் 'துரந்தர்' வரை, இவை எப்படி சினிமாவை அரசியல் ஆயுதமாக மாற்றின என்பது சுவாரசியமானது!

1. எமர்ஜென்சி (Emergency) -
கங்கனா ரனாவத் இயக்கி, நடித்த இந்த படம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை சித்தரிக்கிறது. ஆனால், இது காங்கிரஸ் எதிர்ப்பு பிராபகண்டா என்று விமர்சகர்கள் கூறினர். கங்கனாவின் பாஜக தொடர்பு காரணமாக, படம் அரசியல் பாரபட்சம் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படம் ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே, சோஷியல் மீடியாவில் #BoycottEmergency ட்ரெண்ட் ஆனது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தோல்வியை தழுவியது.
2. சாவா (Chhaava) -
சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், விக்கி கௌஷல் நடிப்பில் வெளியானது. ஆனால், அவுரங்கசீப் எதிர்ப்பு காட்சிகள் காரணமாக, தவறான வரலாற்று தகவல்கள் இப்படத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்படத்தின் காரணமாக நாக்பூரில் வன்முறை ஏற்பட்டது.
இப்படம் இந்து - முஸ்லிம் பிரச்னை தூண்டியது. இருப்பினும் பிராபகண்டா ஜெனரில் இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

3. உதய்பூர் ஃபைல்ஸ் (Udaipur Files) -
கன்ஹையா லால் டெய்லர் மர்டர் (Udaipur Files) - ஹேட் ஸ்பீச் ஹாட் டாபிக்!
முகமது நபியை அவதூறு செய்யும் வகையில் பேசிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட டெய்லர் கன்னையா லாலை தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். உதய்பூரில் நடந்த இந்த சம்பவத்தை மையமாக கொண்டு உதய்பூர் ஃபைல்ஸ் வெளியானது.
முஸ்லிம் - இந்து பிரச்சனையை தூண்டும் வகையில் இப்படம் இருந்ததாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.

4. தி பெங்கால் ஃபைல்ஸ் (The Bengal Files) -
விவேக் அக்னிஹோத்ரியின் 'ஃபைல்ஸ்' சீரிஸின் மூன்றாவது படம். காஷ்மீர் ஃபைல்ஸ் போன்றே எடுக்கப்பட்ட தி பெங்கால் ஃபைல்ஸ் படுதோல்வி அடைந்தது. இது உண்மை வரலாறு" என்று விவேக் கூறினாலும், இப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான பிராபகண்டா படம் என்ற விமர்சனம் எழுந்தது.

5. அஜெய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் எ யோகி (Ajey: The Untold Story of a Yogi) -
யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இது ஒரு ஹிந்துத்வா கதையாக உள்ளது என்று இணையத்தில் விமர்சிக்கப்பட்டது. அதன்விளைவாக இப்படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி அடைந்தது.

6. தி தாஜ் ஸ்டோரி (The Taj Story) -
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹால் ஒரு இந்து கோவில் என்ற இந்துத்துவ பிரசாரத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இபபடத்தின் மீது கடுமையான விமர்சனம் எழுந்தநிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஃப்ளாப் ஆனது.

7. துரந்தர் (Dhurandhar) -
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த இந்த ஸ்பை ஃபில்ம், இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையை சித்தரிக்கிறது. முஸ்லிம் வெறுப்பு பிராபகண்டா படமான துரந்தர் இந்தாண்டின் அதிகம் வசூலித்த இந்தி படம் என்ற சாதனையை படைத்தது. நன்றாக எடுக்கப்படும் பிராபகண்டா படங்கள் தான் மிக ஆபத்தானவை என்பதற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணமாகும்.
இந்த படங்கள் 2025-ஐ சினிமாவின் அரசியல் ஆண்டாக மாற்றின. சில ஹிட் ஆனாலும், பல ஃப்ளாப் - ஆனால் சர்ச்சைகள் சினிமாவை சமூக பிரச்சினை ஆக்கின.
- 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 24 நாளான நிலையில், 'துரந்தர்' திரைப்படம் உலகளவில் ரூ. 1100.23 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 862.23 கோடியும், மற்றநாடுகளில் 238 கோடியும் குறிவித்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- அரபு நாடுகள் துரந்தர் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
- மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மும்பை:
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி 21 நாளான நிலையில், துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன்மூலம் 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- 6 வளைகுடா நாடுகளில் தடை
- துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
அதன்படி இதுவரை துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ள காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.






