search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகிகள்"

    • ராமநாதபுரத்தில் 21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கடந்த 1987-ம் ஆண்டு செப்.17 அன்று மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தேனிசை அக்கீம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், நகரச் செயலாளர் ராமநாதபுரம் பாலா, மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சரிப், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், நகர அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.

    • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் கலெக்டர் மரியாதை செய்தார்.
    • 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாவட்ட கலெக்டர் மரியாதை செய்தார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ12,552 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ1,22,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ1,08,296 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ1,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 நபருக்கு ரூ5,47,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 36 பேருக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 ரூபாய் மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்கு மார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சி தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    • மொழிப்போர் தியாகிகளுக்கு அ.ம.மு.க. அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே கண்ணங்குடி ஒன்றிய தலைவரும், மாவட்ட மாணவரணி செயலாள ருமான சித்தானூர் சரவணன், மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில பொறியாளர் அணி காரைக்குடி சரவணன், தேவகோட்டை நகர செயலாளர் கமலக்கண்ணன், காரைக்குடி நகர செயலாளர் அஸ்வின், தேவகோட்டை ஒன்றிய கவுன்சிலர் கணேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் அம்சகண்ணன், நகர பேரவை செயலாளர் தில்லைராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜம்செல்வா, கண்ணங்குடி ஒன்றிய தகவல் நுட்ப செயலாளர் தாய்மடி செந்தில், அருண், வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் 22 மனுக்கள் பெறப்பட்டன.
    • தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களிடமிருந்து 22 கோரிக்கை மனுக்க ளை பெற்று அதனை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு காணப்பட்டது. மேலும் வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், வாரிசு சான்று மற்றும் குடிநீர் இணைப்பு வேண்டுதல் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இதற்குரிய தீர்வுகள் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல் நடந்தது.
    • மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 75-வது சுதந்திர தினநாளை முன்னிட்டு 1942 ஆகஸ்டு புரட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தியாகி பாலபாரதி செல்லத்துரை பேரன் இருமதி துரைகருணாநிதி, தியாகி சின்ன அண்ணாமலை பேரன் மீனாட்சிசுந்தரம், தியாகி ராமநாதன் மகன் சத்யா, தியாகி இறகுசேரி முத்துச்சாமி மனைவி பஞ்சரத்தினம், 17 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகி ராமு வாரிசு கல்யாண சுந்தரி முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா அரங்கில் இந்த பகுதியில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளில் மற்றும் வாரிசுகள் இப்பகுதியில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    • மதுரை புதூரில் தியாகிகள் நினைவுதினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது.

    மதுரை

    அலங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மதுரை ஐகேர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு தியாகிகளின் 25-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி திருமாவளவன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

    இதற்காக காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மருத்துவமனை நிறைந்த பகுதியாக இருப்பதாக கூறி மனுவை நிராகரித்தனர்.

    பின்னர் மதுரை மாநகரில் ஏதேனும் ஒரு பகுதியை காவல்துறையினரை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனு அளித்தோம். அந்த மனு மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வருகிற 30-ந் தேதி மேல வளவு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை புதூரில் பொதுக்கூட்டம் நடத்த மாநகர காவல் ஆணையர் நேற்று அனுமதி வழங்கி உள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    ×