search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தை யொட்டி தேசியக்கொடி ஏற்றிய கலெக்டர் சாருஸ்ரீ
    X

    திருவாரூரில் கலெக்டர் சாருஸ்ரீ தேசியக்கொடி ஏற்றினார்.

    சுதந்திர தினத்தை யொட்டி தேசியக்கொடி ஏற்றிய கலெக்டர் சாருஸ்ரீ

    • சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், குடும்பத்தினருக்கும் கலெக்டர் மரியாதை செய்தார்.
    • 20 பேருக்கு ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மாவட்ட கலெக்டர் மரியாதை செய்தார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ12,552 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 20 நபர்களுக்கு ரூ1,22,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட சமூக நல துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகையாக 5 பேருக்கு ரூ1,08,296 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ1,74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 3 நபருக்கு ரூ5,47,100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 36 பேருக்கு 9 லட்சத்து 89 ஆயிரத்து 968 ரூபாய் மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்கு மார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் இருந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களை பாராட்டி சான்றிதழ்களை ஆட்சி தலைவர் சாருஸ்ரீ வழங்கினார்.

    இறுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    Next Story
    ×