search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை கூட்டம்"

    • மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.
    • பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைைமச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கைக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் மகளிர் கொள்கை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது.

    இதில் மாநில மகளிர் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.

    தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பாதுகாப்பான ஆரோக்கியமான மற்றும் குறிக்கோள்களை அடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.


    மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி பெண்களுக்கு சம வாயப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல், பாதுகாப்பான வாழ்வுரிமை, கண்ணியம் காத்தல் ஆகியவற்றை உறுதி செய்யவும், சமுதாயத்தில் மேலான நிலையை அடையவும், அரசியலில் வாய்ப்பு பெறவும் அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும், மாநில மகளிர் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கை மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    2001-ல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் மகளிர் கொள்கை தமிழ்நாட்டில் அமலில் இருந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாநில அரசுக்கு என தனியாக மகளிர் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம், வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டு உள்ளது.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

    • வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்.
    • வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

    அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது, கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதவிர, வரும் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுகிறது.
    • கூட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வரும் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

    விவாதிக்கப்படும் பெருள்கள் குறித்து குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
    • தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

    குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என தெரிகிறது.

    மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

    • விசாரணை அறிக்கை வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
    • தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

    தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

    முதல்வர், சட்டத்துறை அமைச்சரிடம் அறிக்கை தரப்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்திலும் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க முடிவு.
    • தமிழக அமைச்சரவை கூட்டம் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 30-ம் தேதிக்கு பதில் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 27-ந்தேதி கூடுகிறது.
    • முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு.

    சென்னை:

    பரபரப்பானஅரசியல் சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி கூடுகிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

    ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்பிக்க உள்ள நிலையில், புதிய சட்ட மசோதா சீர்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இதற்கான அவசர சட்டம் விரைவில் பிறப்பிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

    மேலும் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் இப்போது மீண்டும் அமைச்சரவை கூட்டம் 27-ந்தேதி கூடுகிறது.

    இந்த கூட்டத்தில் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை சற்று குறைந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
    ×