search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி டேர்டெவில்ஸ்"

    ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்த டெல்லி டேர்டெவில்ஸ் ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’ ஆக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #DelhiCapitals #DelhiDaredevils
    ஐபிஎல் தொடரில் இடம்பிடித்திருந்த 8 அணிகளில் ஒன்று டெல்லி டேர்டெவில்ஸ். ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008-ல் இருந்து இந்த அணி கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதுவரை 11 தொடரில் விளையாடி டெல்லி டேர்டெவில்ஸ் அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

    என்றாலும் உரிமையாளர்கள் அணியை சிறப்பாக கொண்டு சென்றார்கள். ஜிண்டால் சவுத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் டெல்லி அணியின் 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஜிஎம்ஆர். குரூப் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்போட்ர்டஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லி அணியின் உரிமையாளராக இருக்கிறது. வருகிற 18-ந்தேதி ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்போது, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக டெல்லி கேபிடல் அல்லது டெல்லி கேபிடல்ஸ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க ஆலோசிக்கப்பட்டது. முடிவில் டெல்லி கேபிடல்ஸ் என புதிய பெயர் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்துள்ளது.
    இலங்கைக்கு எதிராக சதம் அடித்த ஜோ ரூட்டை கங்குலி வெகுவாக பாராட்டினார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பார்வையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. #IPL2019
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக டி20 போட்டியில் அதிக அளவில் விளையாடியது கிடையாது.

    இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஜோ ரூட் 2018 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ஜோ ரூட் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

    தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். பல்லேகெலேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜோ ரூட்டின் ஆட்டத்தை கங்குலி டுவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டினார்.

    அப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஜோ ரூட் மற்றும் ஜிண்டால் ஆகியோருக்கு ‘டேக்’ செய்திருந்தார். ஜிண்டால் சவுத்  வெஸ்ட் ஸ்போர்ட்ஸ்-தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீதம் பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், கங்குலி அவரின் ஆலோசகராக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஜோ ரூட் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஏலத்தில் ஜோ ரூட்டின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
    ஐபிஎல் 2019 சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக முகமது கைஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPL2019 #DD
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசனுக்கான வேலைகளில் 8 அணிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 2018-ஐ விட தற்போது சிறப்பாக விளையாடும் வகையில் வீரர்களை தக்கவைத்துக் கொள்வது, வீரர்களை மாற்றுவது, பயிற்சியாளர்களை நியமிப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    பஞ்சாப் அணி தனது தலைமை பயிற்சியாளரை நீக்கியுள்ளது. இந்நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்திய அணியின் முன்னாள் நடுகள வீரரான முகமது கைஃப்-ஐ துணைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஹோப்பும் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.



    முகமது கைஃப் 2017-ல் குஜராத் லயன்ஸ் அணியில் துணைப் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். முகமது கைஃப் இந்திய அணிக்காக 125 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
    தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 13 போட்டியில் பங்கேற்று 1 அரைசதத்துடன் 212 ரன்கள் சேர்த்தார். ஒரேயொரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடாத விஜய் சங்கர், அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    2014 தொடரில் அறிமுகமான விஜய் சங்கர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் கடந்த வருடம் நான்கு போட்டியில் விளையாடினார். தற்போதுதான் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முழுவதும் விளையாடியுள்ளார்.



    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர்தான் எனக்கு திருப்புமுனை என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘நான் முதல் மூன்று நான்கு போட்டிகளில் போதிய அளவு ரன் அடிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதன்பிறகு, நான் என்னுடைய போட்டிக்கு தயாராகும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

    புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியில் 31 பந்தில் 54 ரன்கள் குவித்தது எனக்குள்ளே மிகப்பெரிய அளவில் உறுதியை கொடுத்தது. அணியில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடிக்க சில அபாரமான ஆட்டங்கள் தேவை’’ என்றார்.
    நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்ச்கள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு டெல்லி வீரரான விஜய் சங்கர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. அந்த அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


    இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய பந்தை பொலார்டு சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த பந்தை டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, பின்னர் பவுண்டரியைத் தாண்டுவதற்கு முன் சக வீரரான போல்ட்டிடம் பந்தை வீசினார். அந்த பந்தை போல்ட் கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆக்கினர்.



    அந்த கேட்சை தொடர்ந்து, ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் ஒன்று சேர்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். முன்னதாக பஞ்சாப் அணியின் மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து இதேபோன்று கேட்ச் பிடித்து ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர்.

    இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் கிளென் மேக்ஸ்வெல், டிரெண்ட் போல்ட் ஜோடி இரண்டு முறை கேட்ச் பிடித்து அசத்தியுள்ளது. #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
    மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ipl2018 #DDvMI
    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது.

    இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பிரித்வி ஷா, 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. ரிஷப் பந்த், 4. மேக்ஸ்வெல், 5. விஜய் சங்கர், 6. அபிஷேக் ஷர்மா, 7. ஹர்ஷல் பட்டேல், 8. அமித் மிஸ்ரா, 9. லியாம் பிளங்கெட், 10. சந்தீப் லாமிச்சேன். 11. டிரென்ட் போல்ட்.

    மும்பை இந்தியன்ஸ் அணயில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சூர்யகுமார் யாதவ், 2. எவின் லெவிஸ், 3. இஷான் கிஷான், 4. ரோகித் சர்மா, 5. குருணால் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ஹர்திக் பாண்டியா, 8. பென் கட்டிங், 9. மயாங்க் மார்கண்டே, 10. பும்ரா, 11 முஷ்டாபிஜூர் ரஹ்மான்.
    சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததாக சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #DDvCSK #Dhoni #Csk
    புதுடெல்லி:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியிடம் வீழ்ந்து 5-வது தோல்வியை தழுவியது.

    பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 ஓவர் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 34 ரன்னில் சென்னை அணி தோற்றது.

    அம்பதிராயுடு அதிகபட்சமாக 29 பந்தில் 50 ரன், (14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். போல்ட், அமித்மிஸ்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்த வெற்றி முலம் சென்னை அணிக்கு டெல்லி பதிலடி கொடுத்தது.

    இந்த தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் என்று நினைக்கவில்லை, 2-வது பகுதியில் ஆடுகளம் ரன் எடுக்க மிகவும் கடினமாகி விட்டது. ‘பிட்ச்‘ எப்படி மாறும் என்பதை கணிக்க கடினமாக இருந்தது. பந்து தொடர்ந்து மெதுவாகவே வந்தது, அதோடு டெல்லி அணி பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் போட்டி மாறிவிட்டது.

    சில ஏரியாவில் நாங்கள் இன்னும் மேம்பட வேண்டும் தொடக்கத்தில் மட்டுமல்ல மிடில் ஆர்டரிலும் பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும். இதுவரை நாங்கள் அதிகமான பேட்ஸ்மேன்களை பயன்படுத்தவில்லை. அடுத்த போட்டியில் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம்.

    உடல் ரீதியாக பலமாக இருப்பதை விட மனரீதியாக தயார் நிலையில் இருப்பது தான் முக்கியம். கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீசுவதில் சரியாகிவிட்டால் எங்கள் அணி சிறந்ததுதான். இன்னும் ஒரே ஒரு லீக் ஆட்டம் இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.#IPL2018 #DDvCSK #Dhoni #Csk
    டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2018 #DDvCSK #VIVOIPL

    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.

    அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி பந்துவீச்சில் நிகிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன், ராயுடு ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. 6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ராயுடு 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார். 

    நிதானமாக விளையாடிய வாட்சன், அமித் மிஷ்ரா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரெய்னாவுக்கு முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராயுடு 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ராயுடு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது.



    டோனி, ரெய்னா இருவரும் நிதானமாக விளையாடினர். 14-வது ஓவரை டெல்லி அணியின் சந்தீப் லமிசானே வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரெய்னா ஆட்டமிழந்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். அமித் மிஷ்ரா வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தில் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. 

    18-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஒவரின் கடைசி பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து பிராவோ களமிறங்கினார். அவர் போல்ட் வீசிய 20-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி பந்துவீச்சில் போல்ட், அமித் மிஷ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 

    இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஹர்சல் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். #IPL2018 #DDvCSK #VIVOIPL
    டெல்லி அணி தோற்றாலும், அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பிடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் தெரிவித்துள்ளார். #IPL2018
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக 17 வயதே அணி வங்காள தேசத்தின் சந்தீப் லாமிச்சேன் விளையாடினார். இவருக்கு இதுதான் முதல் போட்டி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. சந்தீப் லாமிச்சேன் முதல் ஓவரை வீசினார். நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆனால், நான் அறிமுக போட்டியிலே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் இதுவரை முதல் ஓவரை வீசியது கிடையாது. ஆகவே, இந்த போட்டியில் பந்து வீசியது த்ரில்லாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஜாம்பவான் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிக்கு எதிராக வீசும்போது. இது எனக்கும், நேபாளம் அணிக்கும் மிகப்பெரிய தருணம்’’ என்றார்.
    டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

    பிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



    இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து, கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. #IPL2018 #DDvSRH
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பேட்டிங் செய்கிறது. #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டு கோஸ்வாமி சேர்க்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலெக்ஸ் ஹேல்ஸ், 2. தவான், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. ஷாகிப் அல் ஹசன், 6. யூசுப் பதான், 7. கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), 8. ரஷித் கான், 9. புவனேஸ்வர் குமார், 10. சித்தார்த் கவுல், 11. சந்தீப் ஷர்மா.



    டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:-

    1. பிரித்வி ஷா, 2. ஜேசன் ராய், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. மேக்ஸ்வெல், 6. விஜய் சங்கர், 7. பிளங்கெட், 8. ஹர்ஷல் பட்டேல், 9. அமித் மிஸ்ரா, 10. நதீம், 11. டிரென்ட் போல்ட்
    ×