என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை- விஜய் சங்கர் சொல்கிறார்
  X

  ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனை- விஜய் சங்கர் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் 2018 சீசன் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
  தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 13 போட்டியில் பங்கேற்று 1 அரைசதத்துடன் 212 ரன்கள் சேர்த்தார். ஒரேயொரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடாத விஜய் சங்கர், அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  2014 தொடரில் அறிமுகமான விஜய் சங்கர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் கடந்த வருடம் நான்கு போட்டியில் விளையாடினார். தற்போதுதான் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முழுவதும் விளையாடியுள்ளார்.  இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர்தான் எனக்கு திருப்புமுனை என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘நான் முதல் மூன்று நான்கு போட்டிகளில் போதிய அளவு ரன் அடிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதன்பிறகு, நான் என்னுடைய போட்டிக்கு தயாராகும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

  புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியில் 31 பந்தில் 54 ரன்கள் குவித்தது எனக்குள்ளே மிகப்பெரிய அளவில் உறுதியை கொடுத்தது. அணியில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடிக்க சில அபாரமான ஆட்டங்கள் தேவை’’ என்றார்.
  Next Story
  ×