search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DDvRCB"

    டெல்லி அணி தோற்றாலும், அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பிடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சேன் தெரிவித்துள்ளார். #IPL2018
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக 17 வயதே அணி வங்காள தேசத்தின் சந்தீப் லாமிச்சேன் விளையாடினார். இவருக்கு இதுதான் முதல் போட்டி.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. சந்தீப் லாமிச்சேன் முதல் ஓவரை வீசினார். நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டெல்லி அணி தோல்வியடைந்தாலும், அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சந்தீப் லாமிச்சேன் கூறுகையில் ‘‘அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை. ஆனால், நான் அறிமுக போட்டியிலே சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் இதுவரை முதல் ஓவரை வீசியது கிடையாது. ஆகவே, இந்த போட்டியில் பந்து வீசியது த்ரில்லாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஜாம்பவான் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் போன்ற அணிக்கு எதிராக வீசும்போது. இது எனக்கும், நேபாளம் அணிக்கும் மிகப்பெரிய தருணம்’’ என்றார்.
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடும் பாதுகாப்பை மீறி விராட் கோலியின் காலை தொட்டு, செல்பி எடுத்தார் பாசக்கார ரசிகர் ஒருவர். #IPL2018 #viratKohli #DDvRCB
    டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி (40 பந்தில் 70), டி வில்லியர்ஸ் (37 பந்தில் 72) அதிரடியால் 19 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



    ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங்கின் போது விராட் கோலி அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியின் அருகில் வந்து காலை தொட்டு வணங்கினார். பின்னர் விராட் கோலியுடன் தயாராக வைத்திருந்த போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார்.



    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரசிகர்கள் மைதானத்திற்கள் வந்தது பாதுகாப்பை வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவரை பிடித்து வெளியேற்றினார்கள்.
    அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvRCB
    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹல் வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


    ரன் விட்டுக் கொடுத்ததால் சோகத்தில் விராட் கோலி

    அதன்பின் வந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் 13 ஓவரில் 109 ரன்கள் தான் எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 150 ரன்களுக்குள்தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


    19 பந்தில் 46  ரன்கள் குவித்த அபிஷேக் ஷர்மா

    ஆனால் 6-வது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்னும், விஜய் சங்கர் 21 ரன்னும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ×