search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியா"

    • ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன்.
    • ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை மூத்த சகோதரர் என குறிப்பிட்டார் .

    இதற்கு தெலுங்கானா மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பிரதமர் மோடியை அவர் வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறினர். இதற்கு ரேவந்த் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    நான் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக நேரடியாக பிரதமர் மோடியிடம் நிதி கேட்டேன். ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர். அது போன்ற தலைவர்கள் போல் இல்லாமல் நான் பொதுக்கூட்டத்தில் அவரை வெளிப்படையாக சந்தித்தேன்.

    நான் வைத்த கோரிக்கைகள் வெளிப்படையாகவும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் உள்ளது. என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல.

    நான் மோடியை வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறப்படுவதை நிராகரிக்கிறேன். குஜராத் மாநிலத்திற்கு வழங்குவது போல தெலுங்கானாவிற்கும் நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    தெலுங்கானா வளர்ச்சிக்கு நிதி கேட்பதில் யாருக்காவது சிக்கல் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் மோடியை கவர முயற்சி செய்யவில்லை.

    ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன். என்னுடைய வார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் நாட்டின் கூட்டாட்சி அதிகாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
    • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

    காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

    சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    • மத்திய அரசுக்கு காங். கண்டனம்
    • தாரகை கத்பட் அறிக்கை

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணை என்கின்ற போர்வையில் அலைக்களித் தார்கள். நாங்கள் அதை ஜனநாயக் கடமையுடன் எதிர்கொண்டோம். காங் கிரஸ் தலைமை அலு வலகம் ஒவ்வொரு தொண்ட னுடைய கோவில் ஆகும். கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கு எந்த பூசாரிக்கும் அதிகாரம் இல்லை.

    இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான போலீஸ்களை குவித்து, நாட்டில் ஒரு குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாரதிய ஜனதா அரசு.

    பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நடந்து கொண்டிருக்கி றது. பாரதிய ஜனதா அரசு எவ்வளவுதான் அடக்கு முறையை கையாண்டாலும் காங்கிரஸ் என்றைக்குமே அடிபணியாது. என்றைக் கும் தலை நிமிர்ந்து நிற்கும். நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசை திருப்ப மோடி அரசு இது போன்ற செயலை செய்கிறது. ஆகவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து தொண்டர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். சோனியா காந்தியின் வீட்டிற்கு முன்பு குவித்துள்ள போலீஸ்காரர்களை உடனே வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    ×