search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விதிகள்"

    • இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன
    • சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

    பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ₹1.36 லட்சம் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் அவரது வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளது.

    இந்தப் பெண் வழக்கமாக பெங்களூரு, பனஸ்வாடியில் உள்ள காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்கூட்டரில் பயணித்து வருவது வழக்கம். இவர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இல்லாமல் பயணியை பின்னால் அமர வைத்துச் சென்றது, தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பேசியது, போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடந்து செல்வது போன்ற பல்வேறு வகையான விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த பெண் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, டிராஃபிக் சிக்னல்களை கடைப்பிடிக்காதது உள்ளிட்டவை சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அந்த பெண் அண்மையில் தலைக்கவசம் அணியாமல் தனது ஸ்கூட்டரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்றார். இதையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து ரசீது வழங்கினர். அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    அதாவது இதற்கு முன்பு அந்தப் பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதற்கான அபராதத்தையும் சேர்த்து, இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட கூடுதலாகும்.

    இந்தக் கணக்குகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, இதுபோன்ற அபராதங்களில் சிக்காமல் இருக்கவும், பாதுகாப்பு கருதியும் வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    அப்போது விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்து போலீசார் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    • சாலை விதிகளை பின்பற்றி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • செந்தில்கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி அரசு ஆண்கள் பள்ளியில் திருப் பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.மாவட்டத்தின் அனைத்து அரசு மேல்நிலை பள்ளி களிலும் விலையில்லா மிதிவண்டிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர் பேரூ ராட்சியில் மொத்தம் 597 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், சைக்கிள்கள் வழங்கப் படுகிறது. மாணவர்கள், சாலை விதிகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டுதல், சைக்கிள் நிறுத்தத்திற்கான மேற்கூரை அமைத்தல், உள்ளிட்ட மேம்படுத்த வேண்டிய பல்வேறு மேம்பாட்டு வசதிகள் குறித்து கோரிக் கைகளும் வரப்பெற்றுள் ளன. அக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகைகளை அமைச்சர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், திருப்பத்தூர் பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு.செந்தில் கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும் என்று விழாவில் அமைச்சர் பேசினார்.
    • சிவகங்கையில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.

    அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள் களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

    இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • நாம் ஒவ்வொருவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் என்றனா்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2, தெற்கு போக்குவரத்து காவல் நிலையம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வு நிகழ்ச்சி உஷா திரையரங்கம் அருகே நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். திருப்பூா் தெற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் பழனிசாமி, கதிரேசன் ஆகியோா் தலைமை வகித்துப் பேசியதாவது: -

    இருசக்கர வாகனங்களில் செல்லும் நபா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் ஷீட் பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும். ஷோ் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடித்தால் விபத்துகளை தவிா்க்கலாம் என்றனா்.

    இதில் பங்கேற்ற மாணவா்கள் சாலையைக் கடந்து செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடாது. ஓடும் பேருந்துகளில் ஏறக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • சாலை விதிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி அரங்கத்தில் நடந்தது. மாவட்ட போக்கு வரத்து அலுவலர் மூக்கன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசுகையில், சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.

    சாலை விதிகளில் விழிப்பு ணர்வு இல்லாமை, கவனச்சிதறல், பொறுப்பு ணர்வு, விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல், வாகனங்கள் பற்றி அறியாமை, அவசரம், அலட்சியம், போன்ற வற்றைச் சொல்லலாம்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது. இதனால் உயிர்பலியும் அந்த குடும்பத்தில் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது என்றார். 

    ×