search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விதிகளை பின்பற்றி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர வேண்டும்-அமைச்சர்  பெரியகருப்பன்
    X

    10,ம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஊக்கத்தொகை வழங்கினார்.

    சாலை விதிகளை பின்பற்றி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர வேண்டும்-அமைச்சர் பெரியகருப்பன்

    • சாலை விதிகளை பின்பற்றி பள்ளிக்கு பாதுகாப்பாக சென்று வர வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • செந்தில்கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி அரசு ஆண்கள் பள்ளியில் திருப் பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிக்கு வருகின்ற மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.மாவட்டத்தின் அனைத்து அரசு மேல்நிலை பள்ளி களிலும் விலையில்லா மிதிவண்டிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பத்தூர் பேரூ ராட்சியில் மொத்தம் 597 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் நோக்கில், சைக்கிள்கள் வழங்கப் படுகிறது. மாணவர்கள், சாலை விதிகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் கட்டுதல், சைக்கிள் நிறுத்தத்திற்கான மேற்கூரை அமைத்தல், உள்ளிட்ட மேம்படுத்த வேண்டிய பல்வேறு மேம்பாட்டு வசதிகள் குறித்து கோரிக் கைகளும் வரப்பெற்றுள் ளன. அக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகைகளை அமைச்சர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி பேரூராட்சி துணை தலைவர் இந்தியன் செந்தில், திருப்பத்தூர் பேரூராட்சி துணை தலைவர் கான்முகமது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு.செந்தில் கிருஷ்ணன் (சிங்கம்புணரி), கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×