search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பவர்வடகரை"

    • மரம் ஏறும் பொழுது கீழே விழுந்ததில் சுந்தர் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
    • மனமுடைந்த சுந்தர் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 41). விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரமாக மது அருந்தி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தர் உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார்.
    • 10-ம் வகுப்பு மாணவி துர்காதேவிக்கு ரூ.1000- பரிசுதொகை வழங்கப்பட்டது.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாம்பவர்வடகரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மற்றும் தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் இணைந்து ரொக்க பரிசுகள் வழங்கினர். 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அப்துல் வாகித்திற்கு ரூ.1,500 -ஐ பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி வழங்கினார். 2-ம் பரிசு மாணவி பிருந்தாவுக்கு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் ரூ.1000 வழங்கினார். 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பத்மாவுக்கு ரூ.1,500-ஐ சங்கத் தலைவர் சண்முகவேல் வழங்கினார். 2-ம் பரிசு ரூ.1000-ஐ மாணவி துர்காதேவிக்கு ஏ.ஈ.ஓ. சிவணைந்த பெருமாள் வழங்கினார். விழாவில் இளஞ்செழியன், சிவணைந்த பெருமாள், சண்முகவேல் , பாலசுப்ரமணியன், செயலாளர் சின்ன இசக்கி, பொன் சொர்ணவேல், ஆறுமுகம், பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டம் அகரகட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • காமராஜர் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம்.

    சாம்பவர்வடகரை:

    தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகரகட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிறுவன தலைவர் லூர்து நாடார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்த் காசி ராஜன், பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது, ஜூலை 15-ந் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை தென்காசி மாவட்டம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். பொருளாளர் சுப்பிரமணியன் பேசுகையில், ஜூலை 23-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஏழைகளுக்கு உதவி செய்கின்ற விழாவும் ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து அகரகட்டு லூர்து நாடார் பேசும்போது, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலைகளுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்வோம். அதனைத்தொடர்ந்து தென்காசியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம். நாம் கொண்டாடுகின்ற விழா பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்க்கின்ற விழாவாக அமைய வேண்டும். அனைத்து ஊர்களில் இருந்தும் இந்த விழாவை கொண்டாடுவதற்கு நம் சமுதாய மக்களை வருகை தரச் சொல்லி அழைப்பு விடுப்போம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைச்செயலாளர் ஜான் டேவிட், தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார், மாவட்ட துணை செயலாளர் மோகன் வைகுண்டராஜன், முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சுப்பிரமணியன் வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.

    அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.

    இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

    • முப்பெரும் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தலைமை தாங்கினார்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் பேட்டரி வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் புதிய பேட்டரி வாகனம் வழங்கல், நலத்திட்ட உதவிகள், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், செயல் அலுவலர் காயத்ரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாம்பவர் வடகரை பேரூர் கழகச் செயலாளர் முத்து வரவேற்றார்.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பேட்டரி வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும், தூய்மை பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன், உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவா அருணன், செங்கோட்டை யூனியன் சேர்மன் திருமலைச்செல்வி, துணை சேர்மன் கால, அரசு ஒப்பந்தக்காரர் கரையாலூர் சண்முகவேல், சாம்பவர் வடகரை பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிக்குமார், இசக்கி, மெர்சி சுந்தர், அய்யப்பன், தேவி, சுடலைமுத்து, முத்துலட்சுமி,

    அய்யப்பன், விஜய லட்சுமி, ராமலட்சுமி, ரபிக் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகவேல், விஜயகுமார், ராமச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் செல்வின் அப்பாதுரை, ஆறுமுகம், முத்துக்குமார், சந்திரன், அருணா, அம்ஜத், சுப்ரமணி யன், அனந்த பெருமாள், முக்கையா, உதயசூரியன், ரமேஷ், காதர் மைதீன், காசி, ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது, சாமிதேவர், பாலமுருகன், பசுபதி, பாலு, முத்துவேல், கருப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பொறியாளர் கோபி நன்றி கூறினார்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.
    • தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் கூறபட்டிருந்தது.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 14 -வது வார்டு பெரியகுளம் சாலை- விந்தன் கோட்டை அழகிய மணவள பெருமாள் கோவில் இணைப்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த தார் சாலையையும் மீதமுள்ள மண் சாலையையும் தார்சாலையாக அமைத்து, சாலை இருபுறமும் வெள்ளை பாதுகாப்பு சுவர்கள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், சாம்பவர் வடகரை பேரூராட்சி 12- வது வார்டு வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நகரில் வீடுகள் கட்டி அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 550 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து குடிநீர் பைப் லைன் அமைத்திடவும் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்து செல்வம் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • படுகாயமடைந்த முத்து செல்வத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் முத்து செல்வம் (வயது22). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேலாயுதபுரம் அருகே வந்தபோது மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் பலியானார்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்தவர் முருகன் (வயது 42), விவசாயி.

    இவர் கடையநல்லூரில் இருந்து சாம்பவர் வடகரைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வழியில் வேலாயுதபுரம் அருகே வந்தபோது மாடு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் பலியானார். சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர் வடகரை விவசாயிகளின் நலன் கருதி அங்கன்வாடி அருகில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் கீழ்புறம் மற்றும் சுண்ணாம்பு உலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு பகுதிகளில் உலர் களம் அமைத்து தர வேண்டும். மேலும் சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள உலர் களத்தை தரம் உயர்த்தி சரி செய்து தர வேண்டும். சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய வார்டு எண் 1, புதிய வார்டு என்ற 2 புளியம்பட்டி தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2001-2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 2013-2014 ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கொள்ளளவு ஒரு லட்சம் லிட்டர் ஆகும். தற்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. அதனால் இந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சாம்பவர் வடகரை பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முகேஷ் குமார் எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.
    • உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் அனுப்பி வைத்தார்.

    சாம்பவர்வடகரை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ஜி சாபே. இவரது மகன் முகேஷ் குமார்(வயது16). இவர்கள் குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக செங்கோட்டையில் வேத பாடசாலை நடத்தி வருகிறார்கள். முகேஷ் குமார், தனது உறவினர்களுடன் சுந்தர பாண்டியபுரம் குளத்திற்கு குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்தார். உடனே சாம்பவர்வடகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்டபெக்டர் காசிவிசுவநாதன் அங்கு விரைந்து சென்று முகேஷ் குமார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×