சாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

சுப்பிரமணியன் வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார். ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார்.
சாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு
Published on

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார்.

அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர்.

இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார்.

இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com