search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிகள் விடுதலை"

    • வேலூரில் இதுவரை மொத்தம் 26 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
    • சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி வேலூரில் உள்ள மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 5 ஆண் கைதிகளும், ஒரு பெண் கைதியும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுவரை வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள 3. கைதிகளும், ஆண்கள் ஜெயிலில் 23 கைதிகளும் என 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 25 பேர் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் அறிவித்திருந்தார்.
    • மதுரை மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் மாநில அரசுகள் முன்கூட்டியே விடுதலை செய்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ணம், மனிதாபிமான அடிப்படையில் 700 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நீண்ட காலம் சிறைகளில் இருக்கும் கைதிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

    அதன்படி கைதிகள் தேர்வு செய்யப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர். தமிழக அரசின் உத்தரவின்படி ஏற்கனவே சுதந்திர தினத்தையொட்டி 70 கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக மதுரை மத்திய சிறையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் இருந்து 13 பேர், கோவை மற்றும் திருச்சி சிறைகளில் இருந்து தலா 12 பேர் விடுதலையாகி உள்ளனர்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு.
    தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சிறை கைதிகளின் முன் விடுதலை தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி (வருகிற (2022-ம் ஆண்டு) செப்டம்பர் 15-ந்தேதி) நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் வைத்து முன்னதாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையடுத்து சென்னை புழல் சிறைச்சாலை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் 700 பேரை விடுதலை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எந்தெந்த சிறைகளில் யார்-யார் விடுதலை செய்யப்பட உள்ளனர் என்பது பற்றிய விவரங்களை சிறைத்துறை அதிகாரிகள் சேகரித்து வைத்துள்ளனர்.

    ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறை கைதிகள் நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதியையொட்டி 700 சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×